இடுகைகள்

கவி நாட்டியரசர் கஸல் - 925

நினைத்துக்கொண்டே .... இருக்க இனிக்கும் காதல் ... உன்னை நினைத்ததும் .... கண்ணீரும் இனிக்கிறது ....!!! நிலாவில் பேசுவது .... காதலுக்கு அழகு ... எதற்காக நண்பகலில் .... பேச ஆசைப்படுகிறாய் ....? வானமும் பூமியும் .... என்று இணைகிறதோ ... அன்று நீயும் நானும் ... நிச்சயம் சேர்வோம் ....!!! ^  கவி நாட்டியரசர்  கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்  தொடர் பதிவு கஸல் - 925

கவிப்புயல் இனியவன் கஸல் - 924

காதல் விடி வெள்ளி .... அருகில் மின்மினிகளை ... இணைத்து பிரகாசமாய் .... இருக்கிறது ....!!! உன் இதய சாவியை ... தந்துவிடு -இனியும் ... என்னால் தாங்க முடியாது ....!!! நீ காதல் ஜுரம் .... தொற்றிக்கொண்டே ... இருக்கிறாய் ... தொல்லை கொடுத்து ... கொண்டே இருக்கிறாய்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 924

கவிப்புயல் இனியவன் கஸல் - 923

இணையாத .... நம் காதல் .... எங்கிருந்து ,,,,, அழுதுகொண்டிருக்கும் .....? இறைவனையும் .... காதலையும் .... அழுதுதான் பெறவேண்டும் .... வேறு வழியில்லை ....!!! தன் வலிமையை .... பார்க்கமுடியாத ... குதிரையின் கடிவாளம் .... போல் நீயும் காதலை .... பார்க்கவில்லை ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 923

கவிப்புயல் இனியவன் கஸல் - 922

வா  நிம்பதியை தொலைத்து ... காதல் வழியே போவோம் ...!!! பாவம் காதல் ....!!! காதல் இல்லாத இரண்டு .... இதயத்துக்கு நடுவில் ... தத்தளிக்கிறது ....!!! கண்ணீரை .... என் கண்ண்கூட .... விரும்ப்பவில்லை .... வழிந்தோடுகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 922

கவிப்புயல் இனியவன் கஸல் - 921

இதய தீபத்தை .... அணைத்து விட்டாய் ... மீதி எண்ணையில் .... கசியும் வரிகள் தான் ... என் கவிதைகள் ....!!! இதுவரை  பூக்களின் மேல் .... நடந்து வந்தவன் .... முற்களின் மேல் ..... நடக்கப்போகிறேன் ....!!! நீ  என்னை விட்டு ..... போகப்போகிறாய் ..... என்பதை அறிந்து .... இதயம் அழத்தொடங்கி.... விட்டது .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 921

கஸல் - 920

வானவில்லைபோல் .... காதல் அழகாயிருந்தது ,,,, எப்படி வில் உடைந்தது ,,,? உன் முக அழகை விட .... உன் காதல் அழகு .... பிறப்பின் புனிதத்தை ... பெற்று விட்டாய் ...!!! சோதிடமும் காதலும் .... ஒன்று தான் புரிந்துகொள் .... ஒருவனை கொஞ்சம் கொஞ்சமாய் .... கொல்லும்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 920

கஸல் - 919

என்று ஆதாம் ஏவாள் ... தோன்றினார்களோ ... அன்றே காதலும் .... ஏவல் ஆகிவிட்டது ...!!! காதலிலும் ... பாகபிரிவினை ... உடல் என்னிடம் ... உயிர் உன்னிடம் .....!!! பூக்களின் காதல் தோல்வி பனித்துளி ,,,, மேகத்தில் காதல் தோல்வி மழைதுளி ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 919

கஸல் - 918

ஜென்ம பாவத்துக்கு .... பரிகாரமாய் நீ காதலாய் வந்தாய் ....!!! ஏன் முகம் திருப்புகிறாய்... தவறு மனதை உறுத்துதா ..? உனக்கு அனுப்பிய ... காதல் கடிதங்கள் .... திரும்பி எனக்கே வருகிறது .... முகவரியை மாற்றி விட்டாயா ...? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 918

கஸல் - 917

பட்டாம் பூச்சியாய் ... பறந்த என்னை ... விட்டில் பூச்சியாய் ... கருக்கி விட்டாய் ....!!! கண்ணீர் கடலைவிட .... சோகமானது .... உவர்ப்பதில் இரண்டும் ... ஒன்றுதான் ...!!! நான் மூச்சுவிடுவதால் .... நீ வாழுகிறாய் ..... போதும் அது காதல் ... இல்லாவிட்டாலும் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 917

கஸல் - 916

உன்னை காதலித்து பஞ்சு மெத்தையில் ... உறங்காமல் முள் மெத்தையில் .... உறங்குகிறேன் ....!!! நினைவுகள் ... நீர்குமிழியை இருக்கலாம் குங்கும சிமிழாய் இருக்கலாம் சோகத்தின் பாதையில் .... வருகிறேன் நீயும் நிச்சயம் வருவாய் என்ற நம்பிக்கையுடன் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 916

கஸல் - 915

காதலில் ஏற்ற இறக்கம் .... நீ அமர் முடுகளில் .... நான் ஆர்முடுகளில் ....!!! என் ..... தலையெழுத்தை .... நீ காதல் ரேகையால் ... வரைந்து விட்டாய் ....!!! எப்போது கண்ணீர் விட்டேன் ....? காதலுக்கு தண்ணீர் ... தெளித்தல்லவா விட்டேன் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 915

கஸல் - 914

காதலுக்காக ... பூக்கப்பாடதமலர் -நீ  வாடிவிழுந்த மலர் -நான் ...!!! உன் புருவம் .... உனக்கு வில் ... எனக்கு அம்பு ....!!! உன்னையும் .... மரணத்தையும் ... ஒன்றாக காதலிக்கிறேன் .... நிச்சயம் முடிவு உண்டு ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு  கஸல் - 914

கஸல் - 913

நீ  பார்த்த போதுதான் ... ஆணழகனானேன் ....!!! எல்லோரும்  ஒருவகையில் .... பிச்சைகாரர்தான் .... நான் காதலில் - நீ  அழகில் .....!!! உன் .... பேச்சு வல்லினம் ... எனக்கு மெல்லினம் ... காதலுக்கு இடையினம் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு  கஸல் - 913

கஸல் - 912

கவிதை .... உனக்கு வரிகள் ... எனக்கு நீ தந்த .... காயங்கள் .....!!! அரைகுறையாய் .... இருக்கும் காதல் இதயத்தை .... காதல் இதயமாக்குவோம் ... வருகிறாயா ...? உன்  மின்காந்த கண்ணில்.... தப்புவதற்காக -உன்  கண்ணுக்குள் நீராய் .... இருக்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு  கஸல் - 912

கஸல் - 911

காதலில் .... அவளில் நனைவதற்காக .... பனித்துளியில் நனைந்து ..... பார்கிறேன் ....!!! ஒவ்வொரு உயிரினமும் .... தன்னை பெருக்க .... என்னைபோல் காதலுக்கு .... ஏங்குகின்றன ....!!! ஒவ்வொரு குழந்தையும்  காதலின் அழகை காட்டும் ... கண்ணாடிகள் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 911