இடுகைகள்

கவிப்புயல் இனியவன் கஸல் - 937

கண் அசைத்து ... காதல் வானவில் ... ஆனாய்.... இதயம் கருகி ..... இருளானேன் ....!!! நீ சேற்றில் மலர்ந்த மலர் - நான் பூசாரி மலரை .... உதிரப்பண்ணுகிறேன்....!!! நீ ஓடம் நான் துடுப்பு ... காதல் தாழமுக்கம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 937

கவிப்புயல் இனியவன் கஸல் - 936

நான் மரபு - திருக்குறள்... நீ நவீனம் - ஹைக்கூ ... நம் காதல் கண்ணீர்.... கஸல் ......!!! எழுதுகிறேன் ... எழுத்து கருவி மறுக்கிறது .... எழுத்து பிழை -நீ ......!!! நினைவுகள் நரகம் .... கவிதை சொர்க்கம் ..... காதலில் சொர்க்கத்தில் .... மூழ்கி நரகத்தில் வாழ்வர் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 936

கவிப்புயல் இனியவன் கஸல் - 935

பட்ட மரத்தில் சிறு ஈரம் சிறு ஈரத்தில் படரும் .... சிறு பாசிபோல் .... உன் நினைவுகள் ... என்னில் ஒட்டியபடி ....!!! என் உள்ளத்தில் ... உறங்கிகொண்டிருந்த .... உன் நினைவுகள் ..... மெல்ல மெல்ல இறக்கிறது ....!!! நூல் அறுந்த பட்டம் .... மேலும் போகாமல் .... கீழும் விழாமல் தத்தளிக்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 935

கவிப்புயல் இனியவன் கஸல் - 934

என்னை குப்பை ... என்கிறாய் .... அப்போ கூட்டி அள்ளி ... எடுத்துவிடு என்னை ....!!! ஒவ்வொரு..... திருமணத்துக்கு ..... பின்னாலும் ஒரு கண்ணீர் கதை திரைப்படமாய் .... ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!! காதல் ஓட்டை வீட்டில் .... இருக்கிறேன் .... மழையாக வந்து என்னை .... நனைத்துவிடு .....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 934

கவிப்புயல் இனியவன் கஸல் - 933

சூரியன் கிழக்கே .... தோன்றி மேற்கே .... மறையுமாம் .... நீயும் முகத்தில் .... தோன்றி -அகத்தில் ... மறைந்தாய் ....!!! நீ ஒரு விலாங்கு மீன் எனக்கு தலையையும் ... குடும்பத்துக்கு .... வாலையும் காட்டுகிறாய் ....!!! நீ கலங்கரை விளக்கம் .... நான் கப்பல் .... உன் உதவியில்லாமல் .... கரைசேர முடியாது ..... விட்டு விலகி விடாதே .... எனக்கு நேராகவே இரு ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 933

கவிப்புயல் இனியவன் கஸல் - 932

காதலில் மேதை ... ஆனவனும் உண்டு .... போதையானவனும் உண்டு .... நீ என்னை பேதையாக்கி  விட்டாய் .....!!!! காதல் தேன் கூட்டை ... கட்டியதும் நீ  கல்லெறிந்ததும் நீ  காதல் தேன் போல் .... வழிந்தோடுகிறது .....!!! பொருள் காணாமல் ... போனால் களவு .... மனம் காணாமல் ... போனால் காதலாம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 932

கவிப்புயல் இனியவன் கஸல் - 931

இதயத்தின் ஈரம்  வற்றி துடிக்கும்  மீன் ஆனேன் ....!!! வைரம்  கண்ணாடியை .... வெட்டும் ... மௌனம் காதலை ... வெட்டும் .....!!! நீ......  எப்போதும்...  மென்மையானவள்....  கண்ணீர்  மென்மையானது  உன்னைப்போல் .....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 931

காட்சிப்பிழைகள்

படம்
காட்சிப்பிழைகள் -  கே இனியவன் காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்)  காதல்  ஒரு மந்திர கோல் .....  இரண்டு இதயங்களை ....  ஒன்றாக்கி விடும் ....!!!  நெற்றியில் ...  குங்கும பொட்டு.....?  அப்பாடா - சாமி ....  கும்பிட்டு வருகிறாள் ....!!!  தேவனிடம் ....  பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....  என்னிடமும் கேட்பாள் .....!!!  ^^^  கனவு  நிஜத்தில் நிறைவேறாத ...  ஆசைகளை நிறைவேற்றும் ....  நீர்க்குமிழி .....!!!  திடுக்கிட்டு எழுந்தாள் ....  தாலியை கண்ணில் வணங்கி...  என்னை பார்த்தாள் ....!!!  இன்னும்  சற்று தூங்கியிருந்தால் ....  சொர்கத்தை.........  பார்த்திருப்பேன்....!!!  ^^^  நீ என்னை ....  காதலிக்கும் வரை ...  உதடு அசைவெல்லாம் ...  என் பெயர் தான் ....!!!  அவள்  தந்த புத்தகத்துக்குள் ......  மடித்த காகித துண்டு ....  இன்ப அதிர்ச்சி ....  படித்துப்பார்த்தேன் ...  அட வெறும்  பாட சிறு குறிப்புகள் ....!!!...

கவி நாட்டியரசர் - கஸல் - 930

மின் துண்டிகபட்டபின் ... மின் குமிழ் எரியும்..... காத்துகொண்டு இருக்கும் .... காதலன் நான் ....!!! மூச்சாக காதல் செய் ... மூச்சு போக காதல் செய் .... காதலின் செயலே அதுதான் ....!!! உன்னை மறக்க மறதியின் ... உச்ச இடத்துக்கு செல்கிறேன் .... தயவு செய்து அந்த இடத்தை .... நீ தான் காட்டி விடு ....!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 930

கவிப்புயல் இனியவன் - கஸல் - 929

உலகில் எல்லோரும் .... பிச்சைக்காரர்தான் ..... காதலரே அதிகம் ....!!! நீ அதிஷ்ரத்தின் ராணி நான் துர்அதிஷ்ரத்தின் ராஜா காதல் ராஜா ராணி .... விளையாட்டு .....!!! உன் நினைவுகளின் .... தருகைக்காக .... நீர்க்குமிழிகளை .... பரிசாய் தருகிறேன் ....!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 929

கவி நாட்டியரசர் - கஸல் - 928

உன் காதல் மறுப்பை .... பார்த்து நான் மட்டும் .... அழவில்லை - தோழியும் .... கண்ணீர் வடிக்கிறாள் ....!!! என்னில் மறைந்திருந்த .... காதலை உன்னில் .... கண்டுகொண்டேன்.....!!! என்னை.....  கருவறையில் .... சுமந்த தாயையும் ....! இதயத்தில் .... சுமந்த உன்னையும் .....! கல்லறைவரை சுமப்பது .... காதலின் சுமைகள் ....!!! ^ கவி நாட்டியரசர்  கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 928

கவி நாட்டியரசர் - கஸல் - 927

நீ அழகுதான் ... எனக்கு வேண்டாம் .... முடிந்தால் காதல் -தா ....!!! கடித்து துப்பிய நகம் நான் .... சந்தோஷ படாதே .... மீண்டும் வளர்வேன் ....!!! ஏன் தத்தளிக்கிறாய்...? துடுப்பு நான் இருக்கிறேன் ... உன்னை காப்பாற்றுவேன் ...!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் தொடர் பதிவு கஸல் - 927

கவி நாட்டியரசர் கஸல் - 926

நீ எனக்காகவே பிறந்தவள் .... நான் உனக்காக இறக்கிறேன் ....!!! உலகம் ஒரு வட்டம் .... நீ பிரிந்து சென்றாலும் ... என்னிடம் வருவாய் ....!!! எத்தனை காலம் கடிகாரம் முள் போல் ... சுழண்டு கொண்டே... இருப்பது ....!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் தொடர் பதிவு கஸல் - 926

கவி நாட்டியரசர் கஸல் - 925

நினைத்துக்கொண்டே .... இருக்க இனிக்கும் காதல் ... உன்னை நினைத்ததும் .... கண்ணீரும் இனிக்கிறது ....!!! நிலாவில் பேசுவது .... காதலுக்கு அழகு ... எதற்காக நண்பகலில் .... பேச ஆசைப்படுகிறாய் ....? வானமும் பூமியும் .... என்று இணைகிறதோ ... அன்று நீயும் நானும் ... நிச்சயம் சேர்வோம் ....!!! ^  கவி நாட்டியரசர்  கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்  தொடர் பதிவு கஸல் - 925

கவிப்புயல் இனியவன் கஸல் - 924

காதல் விடி வெள்ளி .... அருகில் மின்மினிகளை ... இணைத்து பிரகாசமாய் .... இருக்கிறது ....!!! உன் இதய சாவியை ... தந்துவிடு -இனியும் ... என்னால் தாங்க முடியாது ....!!! நீ காதல் ஜுரம் .... தொற்றிக்கொண்டே ... இருக்கிறாய் ... தொல்லை கொடுத்து ... கொண்டே இருக்கிறாய்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 924