இடுகைகள்

சமுதாய கஸல் கவிதை

எங்களை சுத்தமாக்கி..... தங்களை அசுத்தப்படுத்தும்..... துப்பரவு தொழிலாளர்கள்.....! என் வீடு சுத்தம் குப்பையை தெருவில் வீசி விட்டேன்....! காலையில் தெரு கூட்டப்படும்..... மதியம் குப்பைவண்டி.... தெருவை குப்பையாக்கும்...! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07

இதயத்தில் இருந்து..... எதற்காக முள் வேலி..... போடுகிறாய்.....? தீ மிதிப்பு...... இறைவனுக்காக....... செய்யவேண்டும்...... காதலுக்காக ..... செய்பவன் - நான் ....! மயானத்தின்....... பாதையால் சென்றால்..... உன்னை அடைய முடியும்....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06

நீ இதயத்தில் இருந்த ..... காலத்தில்  என்.... தலையெழுத்து..... மாறிவிட்டது.......! யார் சொன்னது.....? கண்ணீர் வருகிறது..... என்று....... இதயத்தில் இருந்த-நீ வெளியேறுகிறாய்.....! என் ஆயுள்ரேகையை..... ஆண்டவன் எழுதவில்லை..... காதல் எழுதிவிட்டது.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் காதலைபோல்........!

பிரபஞ்சத்தின் உச்சம்..... இருண்டிருக்கும் என்கிறார்கள்.... என் காதலைபோல்........! உன்னை காதலித்த நாள் முதல்...... என் ஆயுள் ரேகை..... தேய்கிறது..................! நீ எங்கே கனவில்....... வரப்போகிறாய்........ நான் தூங்கினால் தானே.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் மனதை அழுக்காக்கி......

இறைவனை உணரவும்..... காதலில் வெல்லவும்...... காத்திருப்பு அவசியம்.......! உன் அழகுதான்..... என் மனதை அழுக்காக்கி...... அலையவைக்கிறது..............! காதலிக்க தயாராகுபவர்...... இதயத்தை கல்லாக்கவும்..... கற்றுக்கொள்ள வேண்டும்......! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

மறுபடியும்நினைத்து விட்டேன்........!

இறைவா..... நீயும் அவளைபோல்..... கனவில் மட்டும்..... வந்து போகிறாய்......! என்  கவிதைகள்..... சிவப்பு நிறமாய்..... இருக்க காரணம் நீ.....! மறதியின் இடத்துக்கு..... மறந்து போய் போய்விட்டேன் மறந்து போய் உன்னை..... மறுபடியும்நினைத்து விட்டேன்........! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கஸலால் காதலுடன் பேசுகிறேன்

கடவுளும் காதலும்.... ஒன்றுதான் ...... இரண்டையும் உணரலாம்.... அடைய முடியாது........! என் இறப்புக்கு முன்..... இறப்பிடத்தை....... காதலால் காட்டுகிறாய்.......! உன்னை நினைத்து........ பூக்களை பார்க்கிறேன்....... பூக்களே வாடி விழுகிறது....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர்                இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மொத்த கஸல் கவிதைகள் 1200

கவிதையின்  ......... ஒவ்வொரு எழுத்தும் நீ எழுத்துப் பிழை ......... ஆகிவிடாதே...! காதல் கண்ணாய்..... இருக்கவேண்டும்..... கண்ணீராய்...... கரைந்தோடுகிறாய்...? காதல் நினைவுகள்..... நட்சதிரங்கள் போல்.... மின்னவேண்டும்..... பட்டப்பகலில் மின்னுகிறாய்...? & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் - 16 ------------ என் கவிதைகள் கோடைகாலத்தில்..... பொழியும் மழை..... மெல்ல இதயத்தை..... நனைக்கிறாய்.....! அழுகை பார்ப்பவர்களுக்கு...... துன்பம்.... கண்களுக்கு இன்பம்.... இதயத்துக்கு சுகம்.....! என் ஒவ்வொரு வலியும்.... உனக்கு எழுதும் கவிதை.... தயவு செய்து அழுதுவிடாதே.... தாங்க மாட்டேன்.....! ------------------------- முள்ளில் மலரும் பூக்கள் 70 ------------------------- மொத்த கஸல் கவிதைகள் 1200 கவிப்புயல் இனியவன்

இதயம் தீக்குளித்தது

கவிப்புயல் இனியவன் கஸல் ----------------------------- இதயம் தீக்குளித்தது நீ என் காதலை....... மறுத்தபோது.....! என்னை தனியே..... இருக்க விடு....... தயவுசெய்து உன்..... நினைவுகளை வந்து.... எடுத்து செல்...........! காதல் என்றால்..... சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல..... சேர்ந்து அழுவதும் தான்....! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம்-15 மற்றுமொரு காதல் கஸல்

கவிப்புயல் இனியவன் கஸல்

கவிப்புயல் இனியவன் கஸல் ----------------------------- அன்று கண் முன் தோன்றினாய் காதல் வந்தது..... இன்று கண் முன் தோன்றுகிறாய்.... கண்ணீர் வருகிறது.....! உன்னை கண்டு..... துடிக்க தெரிந்த இதயம்..... நடிக்க பழகியிருந்தால்..... வலியை சுமந்திருக்க..... தேவையில்லை...........! காதலுக்கும்...... காந்த சக்தி கோட்பாடு..... பொருந்துகிறது..... நான் வடக்கில் நீ தெற்கில்................! & இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

இறந்தும் துடிக்கும் இதயம் 13

என் கவிதைகள் கண்ணீரை மையாக்கி .... கண்ணால் பேசியவை ..... வரிகளாய்  வலிகளாய் ..... பிறக்கின்றன ....! என்னவளே ... நீ மொட்டாகவே.... இருந்திருக்கலாம்,,,,, மலராக வந்து...... வாடிவிட்டாய் .......! பார்வையால்..... நக்கீரன் சாம்பலானார்..... உன் பார்வையால்........ பாடையில் போய்விட்டேன்....! + & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 13 மெல்லிய காதல்வலி கவிதை

முள்ளில் மலரும் பூக்கள் 1068

ஒற்றை சிறகோடு.... பறக்க சொல்கிறாய்..... உனக்காக முயற்சிக்கிறேன்....! எப்படி நீ...? கண்ணாடியின் இருந்து.... விலகும் உருவம் போல்.... வலியில்லாமல் பிரிந்தாய்....? நான் கிழிந்த காற்றாடி..... நீ எவ்வளவு மூச்சு விட்டலும்..... பறக்க மாட்டேன்........! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1068 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1067

காதலில் பறந்து ...... திரிவோம் என்றுகேட்டேன்..... நீ மறந்து திரிகிறாய்....! புன்னகையின்...... பாவச்செயல் காதல்....! என்னை மறக்கக் கூடாது என்பதற்காகவே -நீ வலியை தருகிறாய்.... என்பது புரிகிறது.......! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1067 கவிப்புயல் இனியவன்

இறந்தும் துடிக்கும் இதயம் 11 & 12

நீ மின்னல் இதயத்தை கருக்கிவிட்டாய்.......! தலை குனிந்தாய் நாணம் என்றுநினைத்தேன்.... நாணயம் இல்லாததை.... புரிந்தேன்...............! நான் .... மெழுகுதிரி ஒளி...... நீ மின்னொளியை........ எதிர்பார்கிறாய்................! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 11 & என் மனம் சொறணை கெட்டது.... உன்னையே நினைக்கிறது....! நிலவை காட்டி சோறு ஊட்டலாம்..... காதல் செய்ய முடியாது..... நிலவோடு உன்னை.... ஒப்பிட்டதே தவறு..........! என்னோடு... இணைந்து பயணம்செய்..... காதல் கோட்டை தொடலாம்... நீ அன்ன நடை போடுகிறாய்.......! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 12

இறந்தும் துடிக்கும் இதயம் 10

நான் எழுதும் எழுதுகருவியில்.... கண்ணீர் வலிகள்.... மன்னித்து கொள்... கவிதை வலித்தால்....!!! திருமணம் ஒன்றுக்கு.... மொய் எழுதபோனேன்...... மெய் மறந்தேன் திருமணம்.... அவளுக்கு...............!!! புல்லுக்கும் நிலாவுக்கும் காதல் தோல்வி புல் நுனியில் பனித்துளி..........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 10