இடுகைகள்

காதலுடன் பேசுகிறேன் 02

இலந்தை முள் மீது ..... தூங்குவதும்..... உன்னை நினைவோடு ..... தூங்குவதும்..... ஒன்றுதான் ..........! உன் ஞாபகங்களை ..... சித்திரமாக்குகிறேன் ....... நீயோ  கிறுக்கும் ...... கிறுக்கன் என்கிறாய் .....! கண்ணீரோடு ....... அலைந்தால் தான் ...... உன் காதலை பெற முடிகிறது .........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ---------- காகித பூவாக இரு ...... அப்போதுதான் ..... வாட  மாட்டாய் .......! உன் ...... கண்ணை விட ...... என் ....... கண்ணீர் அழகானது .....! என் இதயம் ..... மட்டும் தான் ...... இருவருக்காக துடிக்கும் ..... உன்னிடம் இதயம் ..... இல்லாததால் ..........! & காதலுடன் பேசுகிறேன்  கஸல் கவிதை 09 கவிப்புயல் இனியவன்

இறை காதல் கஸல்கள் 05

நீந்த துடிக்கும்  மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும்  குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன்  ------ ஐம்புலனை .... அடக்கும் ஆமையின் ... ஆற்றல் எனக்கில்லை ...(-) நான் ..... ஆறறிவு மனிதன் (+) & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன் ------ மனதில் இருள் .... கருவறையில் ..... இறைவனுக்கு .... காட்டும் ஒளியில் .... மனம் குளிர்ந்தேன் ....! & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன் ----- இறைவா..... இரண்டு மனம்  வேண்டும்..........! உன்மீது பற்றை..... அதிகரிக்க வேண்டும்.... என்மீது பற்றை..... குறைக்கவேண்டும்....! & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன் -------- செவ்வாய்....... கிரகத்துக்கு...... போக துடிக்கும்....... மனம்......... செவ்வாய் கிரகதோஷ..... பெண்ணோடு வாழ...... மறுக்கிறது.......! & ஆன்மீக கஸல்  கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதைகள் - 11

பல கோடி தர்மம்..... தொழிலாளிகள் .... சம்பளம் பாக்கி...... ஊரில் தர்மவனான்......! வர்த்தக நிலையத்தின்..... வாணிப பெயர்..... அரிச்சந்திரன் வாணிபம்....! உயிர் கொலை பாவம்..... கருவாட்டுக்கடையில்...... சுவாமிப்படம்.....! & சமுதாய கஸல் கவிதைகள் - 11 கவிப்புயல் இனியவன்  

சமுதாய கஸல் கவிதை

சமுதாய கஸல் கவிதை --------------------------------- விவசாயி வீட்டில்..... அடுப்பு எரியவில்லை வயிறு நன்றாகவே..... எரிகிறது..........! நிலம் .... சேறானால் சோறு....... வறண்டால்....... பட்டினி...............! விவசாயிகளுக்கு..... பருவ மழை - பன்னீர் பருவம் தப்பிய மழை.... கண்ணீர்..........! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதை

எங்களை சுத்தமாக்கி..... தங்களை அசுத்தப்படுத்தும்..... துப்பரவு தொழிலாளர்கள்.....! என் வீடு சுத்தம் குப்பையை தெருவில் வீசி விட்டேன்....! காலையில் தெரு கூட்டப்படும்..... மதியம் குப்பைவண்டி.... தெருவை குப்பையாக்கும்...! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07

இதயத்தில் இருந்து..... எதற்காக முள் வேலி..... போடுகிறாய்.....? தீ மிதிப்பு...... இறைவனுக்காக....... செய்யவேண்டும்...... காதலுக்காக ..... செய்பவன் - நான் ....! மயானத்தின்....... பாதையால் சென்றால்..... உன்னை அடைய முடியும்....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06

நீ இதயத்தில் இருந்த ..... காலத்தில்  என்.... தலையெழுத்து..... மாறிவிட்டது.......! யார் சொன்னது.....? கண்ணீர் வருகிறது..... என்று....... இதயத்தில் இருந்த-நீ வெளியேறுகிறாய்.....! என் ஆயுள்ரேகையை..... ஆண்டவன் எழுதவில்லை..... காதல் எழுதிவிட்டது.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் காதலைபோல்........!

பிரபஞ்சத்தின் உச்சம்..... இருண்டிருக்கும் என்கிறார்கள்.... என் காதலைபோல்........! உன்னை காதலித்த நாள் முதல்...... என் ஆயுள் ரேகை..... தேய்கிறது..................! நீ எங்கே கனவில்....... வரப்போகிறாய்........ நான் தூங்கினால் தானே.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் மனதை அழுக்காக்கி......

இறைவனை உணரவும்..... காதலில் வெல்லவும்...... காத்திருப்பு அவசியம்.......! உன் அழகுதான்..... என் மனதை அழுக்காக்கி...... அலையவைக்கிறது..............! காதலிக்க தயாராகுபவர்...... இதயத்தை கல்லாக்கவும்..... கற்றுக்கொள்ள வேண்டும்......! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

மறுபடியும்நினைத்து விட்டேன்........!

இறைவா..... நீயும் அவளைபோல்..... கனவில் மட்டும்..... வந்து போகிறாய்......! என்  கவிதைகள்..... சிவப்பு நிறமாய்..... இருக்க காரணம் நீ.....! மறதியின் இடத்துக்கு..... மறந்து போய் போய்விட்டேன் மறந்து போய் உன்னை..... மறுபடியும்நினைத்து விட்டேன்........! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கஸலால் காதலுடன் பேசுகிறேன்

கடவுளும் காதலும்.... ஒன்றுதான் ...... இரண்டையும் உணரலாம்.... அடைய முடியாது........! என் இறப்புக்கு முன்..... இறப்பிடத்தை....... காதலால் காட்டுகிறாய்.......! உன்னை நினைத்து........ பூக்களை பார்க்கிறேன்....... பூக்களே வாடி விழுகிறது....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர்                இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மொத்த கஸல் கவிதைகள் 1200

கவிதையின்  ......... ஒவ்வொரு எழுத்தும் நீ எழுத்துப் பிழை ......... ஆகிவிடாதே...! காதல் கண்ணாய்..... இருக்கவேண்டும்..... கண்ணீராய்...... கரைந்தோடுகிறாய்...? காதல் நினைவுகள்..... நட்சதிரங்கள் போல்.... மின்னவேண்டும்..... பட்டப்பகலில் மின்னுகிறாய்...? & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் - 16 ------------ என் கவிதைகள் கோடைகாலத்தில்..... பொழியும் மழை..... மெல்ல இதயத்தை..... நனைக்கிறாய்.....! அழுகை பார்ப்பவர்களுக்கு...... துன்பம்.... கண்களுக்கு இன்பம்.... இதயத்துக்கு சுகம்.....! என் ஒவ்வொரு வலியும்.... உனக்கு எழுதும் கவிதை.... தயவு செய்து அழுதுவிடாதே.... தாங்க மாட்டேன்.....! ------------------------- முள்ளில் மலரும் பூக்கள் 70 ------------------------- மொத்த கஸல் கவிதைகள் 1200 கவிப்புயல் இனியவன்

இதயம் தீக்குளித்தது

கவிப்புயல் இனியவன் கஸல் ----------------------------- இதயம் தீக்குளித்தது நீ என் காதலை....... மறுத்தபோது.....! என்னை தனியே..... இருக்க விடு....... தயவுசெய்து உன்..... நினைவுகளை வந்து.... எடுத்து செல்...........! காதல் என்றால்..... சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல..... சேர்ந்து அழுவதும் தான்....! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம்-15 மற்றுமொரு காதல் கஸல்

கவிப்புயல் இனியவன் கஸல்

கவிப்புயல் இனியவன் கஸல் ----------------------------- அன்று கண் முன் தோன்றினாய் காதல் வந்தது..... இன்று கண் முன் தோன்றுகிறாய்.... கண்ணீர் வருகிறது.....! உன்னை கண்டு..... துடிக்க தெரிந்த இதயம்..... நடிக்க பழகியிருந்தால்..... வலியை சுமந்திருக்க..... தேவையில்லை...........! காதலுக்கும்...... காந்த சக்தி கோட்பாடு..... பொருந்துகிறது..... நான் வடக்கில் நீ தெற்கில்................! & இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

இறந்தும் துடிக்கும் இதயம் 13

என் கவிதைகள் கண்ணீரை மையாக்கி .... கண்ணால் பேசியவை ..... வரிகளாய்  வலிகளாய் ..... பிறக்கின்றன ....! என்னவளே ... நீ மொட்டாகவே.... இருந்திருக்கலாம்,,,,, மலராக வந்து...... வாடிவிட்டாய் .......! பார்வையால்..... நக்கீரன் சாம்பலானார்..... உன் பார்வையால்........ பாடையில் போய்விட்டேன்....! + & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 13 மெல்லிய காதல்வலி கவிதை