இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ என்ன இதயமா ..?

நீ என்ன இதயமா ..? மூளையா ...? இதயம் என்றால் .. மறக்க மாட்டாய் ....!!! உன் வலிகளுக்கு பயந்து ... மறதியின் இடத்தில் வாழ்கிறேன் ....!!! காதல் தனித்துவமானது ... அதில் நீயோ மகத்தவம் ... உடனுக்குடன் வலி .. தருகிறாய் ...!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 738

காதலால் வந்த வலிகள் ..

என் ஒவ்வொரு வரியும் ... காதலால் வந்த வலிகள் .. உன் கையில் இருக்கிறது ... இன்பம் ....!!! காதல் ஒரு பிரபஞ்சம் எல்லையில்லை ... எப்படி உன்னை நான் .. புரிவது ...? காதலுக்கு பின்னால் இத்தனை ஆபத்தா ...? வா  நீந்துவோம் ... ஆபத்து கடலில் ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 737

காதல் ரோஜாவை ...

காதல் ரோஜாவை ... தந்தேன் -நீ காதல் .. ரோஜா முள்ளை வைத்திருக்கிறாய் ....!!! உன் காதல் சிலந்தி .. வலையில் சிக்கிய பூச்சி .. நான் உன்னால் இறக்கவும் .. முடிவு செய்துவிட்டேன் ...!!! மயானத்தின் அருகே ... இருக்கிறேன் -நீ சொல்லும் பதிலுக்காக ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 736

படாத பாடு படுகிறேன்....!!!

சொல்  காதல் கடல் நீரா ...? இளநீரா ..? எனக்கு பன்னீர்  உனக்கு...? ஒருபுறம் நினைவு  மறுபுறம் கனவு  நீ மகுடி  நான் பாம்பு  படாத பாடு படுகிறேன்....!!! நீ அழுதத்தை  நம்பிவிட்டேன்  கண்ணீர் என்று ....!!! கசல் 605

நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!

காதல் உனக்கு  கற்பூரம் எனக்கு  தீபம்  நிலைத்திருக்கிறேன் ...!!! யோசித்து வருவதில்லை  காதல்  யோசிக்காமல் உன்னை  சந்தித்தேன்  உணர்ந்து கொண்டேன்  தவறை ....!!! இளநீர் போல் உன்னை  இதயத்தில் வைத்திருக்கிறேன்  நீ கண்ணீராய் வருகிறாய் ...!!! கஸல் 604