முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமுதாய கஸல் கவிதை

 சண்டை போடுவதாயின்...

சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!

சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

^^^^^

பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!

சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

^^^^^

ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!

சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
    கவிப்புயல் இனியவன்
    ஓலை வீடு ....
    வறியவனுக்கு வசிப்பிடம் ....
    செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!!

    வியர்வை ....
    உழைப்பாளிக்கு நாற்றம் .....
    முதலாளிக்கு துற நாற்றம் .....!!!

    உழைப்பு முழுதும் ....
    செலவு செய்தால் .....
    ஊதாரி என்கிறார்கள் ....
    செலவு செய்தது ....
    உணவுக்கு மட்டும் .....!!!

    &
    சமுதாய கஸல் கவிதைகள்
    கவிப்புயல் இனியவன்
    2016 . 11 . 12
      கவிப்புயல் இனியவன்
      மரமாக இருந்தபோது ....
      நிம்மதியாக இருந்தேன் .....
      பலகை ஆகினேன்.....
      படாத பாடு படுகிறேன் .....!!!

      அடை மழைக்கு.....
      கிழிந்த குடைக்கும்....
      மதிப்பிருக்கும்........!!!

      சேர்ந்த செல்வம் ....
      கரைகிறது ......
      தண்ணீரை .....
      வீணாக்கியதால்.......!!!

      &
      சமுதாய கஸல் கவிதைகள்
      கவிப்புயல் இனியவன்
      2016 . 11 . 12
        கவிப்புயல் இனியவன்
        வெற்றியின்
        பாதையை இலகுவாக .....
        கடந்துவிடடேன் ......(+)
        இப்போது தான் ....
        புரிந்தது பாதையை ....
        முதலில் யாரோ ....
        போட்டு விட்டான் .....(-)

        கஞ்சி
        சலவையில் துணியை ....
        வெண்மை ஆக்கிறது......
        ஏழையின் வயிறை .....
        நிரப்புகிறது ...............!!!

        &
        சமுதாய கஸல் கவிதை
        கவிப்புயல் இனியவன்
          கவிப்புயல் இனியவன்
          ஒவ்வொரு பிறந்த நாள் .....
          கொண்டாட்டமும் .....
          இறக்கும் நாளின் ....
          திறப்பு விழா ..............!!!

          நீ
          அடையாளப்படும் ....
          போதுபிரச்சனையை ......
          எதிர் கொள்கிறாய் ......!!!

          மெழுகு திரி .....
          தொழிற்சாலையில் ......
          உழைப்பாளிகள் ....
          உயிருள்ள மெழுகுதிரி .......!!!

          &
          சமுதாய கஸல் கவிதை
          கவிப்புயல் இனியவன்
            கவிப்புயல் இனியவன்
            தொழிலாளியை .....
            சுரண்டுவதற்கு அவர்களிடம் ......
            சதையில்லை .....
            எலும்புகள் தான் மீதியாய் ......
            இருக்கின்றன ...........!!!

            குடிகாரர் மட்டுமல்ல .....
            அரசியல் வாதிகளும் ....
            உளறுகிறார் ................!!!

            நீ
            தீக்குச்சி தலைக்கனம் ....
            உன்னை சாம்பலாக்கும் ....!!!

            &
            சமுதாய கஸல் கவிதை
            கவிப்புயல் இனியவன்
              கவிப்புயல் இனியவன்
              எங்களை சுத்தமாக்கி.....
              தங்களை அசுத்தப்படுத்தும்.....
              துப்பரவு தொழிலாளர்கள்.....!

              என் வீடு சுத்தம்
              குப்பையை
              தெருவில் வீசி விட்டேன்....!

              காலையில்
              தெரு கூட்டப்படும்.....
              மதியம் குப்பைவண்டி....
              தெருவை குப்பையாக்கும்...!

              &
              சமுதாய கஸல் கவிதை
              கவிப்புயல் இனியவன்
                கவிப்புயல் இனியவன்
                சமுதாய கஸல் கவிதை
                ---------------------------------

                விவசாயி வீட்டில்.....
                அடுப்பு எரியவில்லை
                வயிறு நன்றாகவே.....
                எரிகிறது..........!

                நிலம் ....
                சேறானால் சோறு.......
                வறண்டால்.......
                பட்டினி...............!

                விவசாயிகளுக்கு.....
                பருவ மழை - பன்னீர்
                பருவம் தப்பிய மழை....
                கண்ணீர்..........!

                &
                சமுதாய கஸல் கவிதை
                கவிப்புயல் இனியவன்
                  கவிப்புயல் இனியவன்
                  பல கோடி தர்மம்.....
                  தொழிலாளிகள் ....
                  சம்பளம் பாக்கி......
                  ஊரில் தர்மவனான்......!

                  வர்த்தக நிலையத்தின்.....
                  வாணிப பெயர்.....
                  அரிச்சந்திரன் வாணிபம்....!

                  உயிர் கொலை பாவம்.....
                  கருவாட்டுக்கடையில்......
                  சுவாமிப்படம்.....!

                  &
                  சமுதாய கஸல் கவிதைகள் - 11
                  கவிப்புயல் இனியவன்  

                  கருத்துகள்

                  இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

                  கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

                  கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

                  சமுதாய முன்னேற்றம்