இடுகைகள்

கஸல் - 885

நானும் பனித்துளியும் .... ஒன்றுதான் இரவில் .... அழுதுகொண்டிருப்பதில் ....!!! நீ போவது வலியில்லை.... போய் என்ன .... செய்யபோகிறாய் .... என்பதுதான் வலி ....!!! எனக்கு உனக்கும் அகண்ட இடைவெளி ... காதலால் தோன்றியது ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 885

கஸல் - 884

உன்னை பார்த்ததை விட ... உன்னை பற்றி கேட்டதே .... அதிகம் ..... என் காதல் காதால் .... தோன்றியது ....!!! எனக்கு உயிர் இருக்கும் .... வரைக்கும் நீ இருப்பாய் .... நீ போனாலும் காதல் .... இருக்கும் .....!!! உன் காதலின் ஆழத்தை .... திருமண அழைப்பிதலில் .... அழகாக போட்டிருந்தாய் ..... பொருத்தமான் பெயருடன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 884

கஸல் - 883

நீ எப்படி வந்தாய் ....? புரியவில்லை எனக்கு .... எப்படி சென்றாய் .... புரிந்துகொண்டேன் .... கண்ணீர் வந்தபோது ....!!! காதலுக்கு முன் .... உறவுகளுக்கு .... ரோஜாவோடு ராஜா .... காதலின் பின் .... உறவுகளுக்கு .... முள்ளோடு ராஜா ....!!! காதலை நீ சொல் .... காதலிப்பது எப்படி ...? நான் சொல்கிறேன் .... மறக்காமல் - பிரிவது .... எப்படி என்றும் சொல் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 883

கஸல் - 882

எனக்கு நரகம் வராது ... காதல் வந்துவிட்டதே .... எனக்கு சொர்க்கமும் ... வராது நீ  இல்லையே....!!! என் புகைபடத்தை .... தந்துவிட்டாய் ..... இதயம் புகைக்கவில்லை ....!!! மனிதனின் தோற்றமும் .... முடிவும் கண்ணீருடன் .... தொடங்க காரணமே .... காதல் தான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 882

கஸல் - 881

உன்னை காதலிப்பதும் .... என்னை காயப்படுத்துவதும் .... ஒன்றுதான் .....!!! என் நினைவுகள் ... உனக்கு தூசிபோல் ..... நான் அலைந்துகொண்டு .... இருக்கிறேன் ....!!! ஒன்றை நினைவில் வை .... உன்னை காதலிப்பதால் .... என் உயிர் துடிக்கிறது ... நீ காயப்படுத்தினாலும் இதயம் தாங்குகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 881

கஸல் - 880

உன் வெட்கம் என்னை .... தலை குனிய வைக்கிறது .... உன் பார்வை என்னை .... மனிதனாக்கியது....!!! என் காதல் மீது - நீ ... ஏறிநின்று குதிக்க ஆசைப்படுவதேன் ...? காதலில் .... வலி -ராகம் .. கண்ணீர் - மது .... பிரிவு - வாழ்கை ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 880

கஸல் - 879

எட்ட முடியாத காதலர் நாம் ..... சூரியனும் சந்திரனாய் ... வானமும் நிலமுமாய் ...!!! காதலை விதைத்தேன் ... வதையாகும்  உணர்ந்தேன் ... காதல் ஆழ்கடல் -நீ துறைமுகம் ....!!! நான் வெறும் நெருப்பு ... நீயே வெப்பம் ... நீயே ஒளி.... நீயே கரி .... நீ தணல் ..... அணைந்து விடாதே ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 879

கஸல் - 878

வானவில்லில் ஏழுநிறம் .... வானத்து அழகியே உனக்கும் ... வானவில் குணமோ ....? வா என்கிறாய்  போ என்கிறாய் ....? விட்டில் பூச்சியை .... விளக்கம் காட்டினேன் .... விதி எனக்கும் சரியானது .... விதி மதி இரண்டும் இழப்பாய் .... காதலித்துப்பார் ....!!! வீறாப்புடன் .... வீட்டை எதிர்த்து காதல் செய்தேன் .... வீதியில் நிற்கிறேன் உன்னை இழந்து ... காதல் கண்னை மறைக்கும் ... உறவையும் மறக்கும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 878

கஸல் - 877

கண்ணில் பட்டு கதலானாய் .... கல்லறைவரை தொடருமென்றாய்.... கண்மூடி தனமாய் நம்பினேன் ... கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!! கிட்டவா காதல் பரிசு தா .... கிள்ளி விட்டு போனபோது .... கிள்ளியது என் இதயம் என்பதை .... கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது .... கிறுக்கணுக்கு  புரிந்தது ....!!! காத்திருந்தேன் கவிதை வந்தது .... காணாமல் போனாய் கவிதை வந்தது .... காதல் பைத்தியம் என்றார்கள் .... காதலித்து பாருங்கள் புரியும் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 877

கஸல் - 876

இறந்த காலம் தான் .... இனிமையான காலம் .... இனிமையாய் நீ பேசி .... இளமையை ரசித்தேன் .... இப்போ தனிமையில் ....!!! உனக்காய் வாழ்வேன் ... உறுதியாய் கூறினாய் .... உயிரை மறந்து வாழ்ந்தேன் ..... உயிர் வலிக்கிறது இப்போ ....!!! அன்பே என்றாய் .... அனைத்தையும் இழந்தேன் .... ஆருயிரே என்றாய் .... ஆவியாய் அலைகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 876
படம்
படம்
படம்
படம்

கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் கஸல் - 875

காதல் மலர் போல் .... காலையில் அழகாய் .... மாலையில் வாடிவிடும் .... என்றாலும் காதல் ... அழகும் மென்மையும் ....!!! மரணத்தில் கூட நாம் இணைய முடியாது நீ உள்ளூர் மயானத்தில் ... நான் வெளியூர் மயானத்தில் ....!!! உன்னைப்போல் காதலிக்க ... தெரியாத உள்ளமும் ஒரு .... அங்கவீனம் தான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 875