இடுகைகள்

உன் பார்வைக்கு அஞ்சி ...

என் கவிதைகள் கண்ணீரை பேனா மையாக்கி .... கண்ணால் பேசியவை வரிகளாய்  ... வலிகளாய்  பிறக்கின்றன ....!!! என்னவளே ... நீ காலை மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... அப்போதுதான் வாடமாட்டாய் ...!!! உன் பார்வைக்கு அஞ்சி ... நீ அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;763

நீ சந்தோசமாய் இரு ....!!!

நீ தொலைந்தால் தானே... நான் கவலைப்படுவேன் ... நீ என்னை நினைத்து ஏன்.. கண்ணீர் விடுகிறாய் ,,,,? உன் வாழ்க்கைக்காக ... என் வாழ்க்கையை பறித்தவள் -நீ சந்தோசமாய் இரு ....!!! உன்னை நான் நேரில் ... ரசிப்பதை விட கவிதையில் ... ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;762

கண்ணுக்குள் ஈரம்

காதலுக்கு கண் இல்லை கண்ணூறு உண்டு .... ஊர் கண் படவில்லை ... நம் கண்ணே பட்டு விட்டது ...!!! ஒவ்வொருவனுக்கும் ... அவனவன் காதல் தான் ... ஆயுள் பாசக்கயிறு .....!!! கண்ணுக்குள் ஈரம் ... காதல் - உன்னுக்குள் ஏன் ஈரமில்லை உயிரே ...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;761

நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...

வெள்ளத்தில் கரைந்த மண்  போல் என் காதல்  கண்ணீரில் கரைந்து போனது ....!!! பேச்சும் மூச்சுமாய் .... இருந்த நம் காதல் ... இறுதி மூச்சை இழுத்த .. வண்ணம் இருக்கிறது ....!!! இதயம் மட்டும் ... வெளியில் இருந்திருந்தால் ... நிச்சயம் நீ அழுதிருப்பாய் ... என்னை ஏற்றிருப்பாய்....!!! கே இனியவன் கஸல் கவிதை ;760

நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!!

உன் இதயத்தில் காதல் நெல் விதைத்தேன் ... புல்லாய் வளர்கிறது ....!!! சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!! எத்தனையோ.... வடிவமாய் உன்னை .. தரிசிக்க விரும்புகிறேன் ... நீ காலனாய் வருகிறாய் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;759

தொலைத்துவிட்டேன் ....!!!

எதையுமே விரும்பாத ... உன்னை நான் விரும்பி ... தொலைத்துவிட்டேன் ....!!! கருங்கல்லில் -நீர் ... வடியும் என்பதை ... உன் காதலில் இருந்து ... நம்பிவிட்டேன் ....!!! பெண்ணை பற்றி நான் .... கவிதை எழுதியதில்லை ... உன்னை பற்றியே கவிதை ... எழுதுகிறேன் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;758

இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ என்னை விரும்மபில்லை .... என் கவிதையையும் ... விரும்பவில்லை - நீ இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!! தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலில்லாமல் இருக்கும் ... என்னவளும் தான் ....!!! கவிதை எழுதி எழுதி ... ஞானியாகிவிட்டேன்.... தன்னை மறந்த நிலைதானே ... ஞானம் .....!!! கே இனியவன் கஸல் கவிதை ;757

காதலை வைத்திரு ...!!!

என் காதல்  இனிமையானது ... இதயம் பாலாப்பழம்போல் ... முட்களால் மூடியுள்ளது ....!!! எனக்கு ஒரு உதவிசெய் .... என்னை விட்டுவிடு ... காதலை வைத்திரு ...!!! இழந்தது  கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம்  தந்த காதலை ....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;756

இதயம் பள்ளமாகவே ... போய் விட்டது ....!!!

என்னை கொஞ்சம் ... கொஞ்சமாக வருத்தவே ... கவிதை எழுதுகிறேன் ....!!! நீ புரிய முடியாத புதிர் நான் புரிந்தும் புரியாத காதல் புதிர் ...!!! நீ என்னோடு ... நடந்து வந்த தூரம் ... பாதையில் குழி வரவில்லை .. இதயம் பள்ளமாகவே ... போய் விட்டது ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;755

பிரிவும் காதல் தான் ....!!!

கல்லை உரசி ... நெருப்பு மூட்டியது அறிவு நீ என் கண்ணை... உரசி காதல் தந்தாய் ... அதுதான் சாம்பலானதோ...? எனக்கும் உனக்கும் .... உறவும் காதல் தான்.... பிரிவும் காதல் தான் ....!!! சீ ....உனக்கு காதலிக்க கூட  .. தெரியாது என்று ... இழிவாக பேச ... வைத்துவிட்டாய் .....!!! கே இனியவன் கஸல் கவிதை ;754

காதலுக்கு மரணம் இல்லை ...

உன்னை நினைத்து அன்பாகத்தான் கவிதை ... எழுதுகிறேன் ... எப்படியோ வலியாக... மாறி விடுகிறது ...!!! காதலுக்கு மரணம் இல்லை ... எப்படி நம் காதல் புதைகுழிக்குள் நடக்கிறது  ....!!! என்னை விட உலகில் ஏழை யாரும் இல்லை இன்ப வரிகளே வருகுதில்லை ......!!! கே இனியவன் கஸல் கவிதை ;753

கருவிழி வெண்மையாகிவிட்டது ...!!!

உன்னை  காதலித்ததில் .... நன்றாக அழுவதற்கு ... கற்றுக்கொண்டேன் ...!!! நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...!!! உனக்காக  காத்திருந்த இரவுகளால்  என் கருவிழி ... வெண்மையாகிவிட்டது ...!!! கே இனியவன் கஸல்  கவிதை ;752

கே இனியவன் கஸல்

காற்றை போல் உனக்கு ... வாசமுமில்லை நிறமுமில்லை ..... காதலில் பயன் படுத்தாதே .....!!! இரவின் கனவும் ... உன் நினைவுகளால் .. கண்ணீர் வரவைகிறது ...!!! நான் உன் கண் இமையை.... ரசிக்கிறேன் நீயோ ... அழித்து விடுகிறாய் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;751

எனது 750 வது கஸல் கவிதை

என்  மனதின் பலவீனம்  மறக்கதெரியாது ... உனக்கோ அது பலம் ...!!! முகப்பருவை பார்த்து ... கவலைபடுகிறாய்... அது என் நினைவுகளின் ... அடையாளம் ....!!! காதல்  எனக்கு உள் சுவாசம்  உனக்கு வெளிச்சுவாசம் .. நம் கடந்த காலம் ... புதைகுழிக்குள் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 750 எனது 750 வது கஸல் கவிதை  இத்தனை வரை ரசித்த ரசிக உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 

என் காதல் உன் இதயத்தில் ...!!!

உன் வலியை கிறுக்குகிறேன்... கவிதையாக மாறுகிறது ... நான் கவிஞனாம் ... வலி தெரியாதவர்கள் ...!!! உனக்கு எழுதிய கவிதை ... கடதாசியை குப்பை வண்டி ... ஏற்றி செல்கிறது ... மனம்  தப்பி விட்டது ....!!! தேவாலையத்தில் .... யோசிக்கிறேன் -இறைவா கேளுங்கள் தரப்படும் என்றீர் அவளிடம் கேட்டேன்.... தரவில்லையே ...!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 749