இடுகைகள்

கே இனியவன் - கஸல் 88

பொருத்தமில்லாதது .. பொருந்தாது .. பொருந்தக்கூடியது பொருந்தாமல் இருக்காது பொருத்தமானவளா ...? பொருந்தாதவளா...? தாமைரை இலையில்.... தண்ணி நிற்காது என்கிறாய்... தாமரையே தண்ணீரில் தான்... இருக்கிறது..... நான் உன்னோடு கண்ணீரில் ... நிற்பதுபோல் ....!!! நீ என் பகலும் இரவும்..... மீண்டும் என்னிடம் நீ... வரத்தான் வேண்டும் .... பகலில் இருளாய் இருக்கிறேன் .... இருளில் பகலாய் இருக்கிறேன் ...!!! + கே இனியவன் - கஸல் 88

கே இனியவன் - கஸல் 87

நீ எனக்காக  படைக்க பட்டவள் ... நான் உனக்காக ... இறக்கபோகிறவன்...!!! உன்னை .. அடையமுடியாத ... அதிஸ்ரசாலி ....!!! இரவுக்கு இருள் அழகு .. இருண்ட காதலுக்கு நீ  அழகு ....!!! காதலுக்கு கவிதை அழகு .... கண்ணீருக்கு நீ அழகு ...!!! + கே இனியவன் - கஸல் 87

கே இனியவன் - கஸல் 86

நான் வெறும் கடதாசி .. நீ தான் அதில் உள்ள .. கவிதை வரிகள் ... நீ இல்லையென்றால் ...? நான் வெறும் .. துரிகை -நீ தான் ... அதில் ஓவியம் .... கொஞ்சம் சிரித்துகொள் ...!!! நான் ... வெறும் உடல்.... நீ தான் என் உயிர் ... நீ பிரியப்போகிறாய் என்கிறாயே -என்னை பற்றி கொஞ்சமேனும் சிந்தித்தாயா ....??? + கே இனியவன் - கஸல் 86

கே இனியவன் - கஸல் 85

நீ நிலா நான் நட்சத்திரம் .... அமாவாசையிலும் .... இருப்பேன் ....!!! உன் சிரிப்பு ... இதயசிறையை... உடைத்தெறிந்து.... விட்டது....!!! காதலால் .... தரையில் துடிக்கும்... மீனாகவும்.... கூட்டில் அடைபட்ட.... கிளியாகவும் இருக்கிறேன் .....!!! + கே இனியவன் - கஸல் 85

கே இனியவன் - கஸல் 84

நீ  என்னோடு... வாழுகிறாய் ..... நமக்கிடையே மௌனம்.... வாழுகிறது .... பிரிவை தடுக்கிறது....!!! உன்  ஒவ்வொரு பார்வையும் எனக்கு கவிதை உன் மௌனம் .... எனக்கு மரணம் ....!!! காதலில் நான் .... காற்று போன வண்டி ..... காற்றோடு நீ வந்தால் ... இயங்குவேன் ....!!! + கே இனியவன் - கஸல் 84

கே இனியவன் - கஸல் 83

என் கவிதைகள்...! காதலர் இடையில் .... பிரபல்யம் -கவிதை.... நன்றாக இருப்பதல்ல..... நம் காதல் சோகம் ... அவர்களுக்கும் .... பொருந்துகிறது ....!!! நீ எப்போதே... சென்று விட்டாய்... என் இதயம் நான் .... சொன்னாலும் .... நம்புவதாய் இல்லை ...!!! மீண்டும் வந்தாய் .... காதலியாய் இல்லை .... வானத்து தேவதையாய் ... உயிரே உன்னிடம் நானும் .... விரைவில் வருவேன் ....!!! + கே இனியவன் - கஸல் 83

கே இனியவன் - கஸல் 82

கவலையிலும் ... சிரிக்க கற்றுதந்தவள் .... கவலையை விட .... எதையும் கற்று தராதவள் ...!!! என் இதய சுற்றோட்டம் இரத்தத்தால் -இல்லை உன் நினைவால் தான் இயங்குகிறது....!!! நான் அவசர சிகிச்சையில்.... நீ உயிர் விடும் மூச்சு ...!!! + கே இனியவன் - கஸல் 82

கே இனியவன் - கஸல் 81

கண்ணீர் வெறும் தண்ணீர் ..... அது உனக்கே ....! எனக்கோ ... இதயத்தில் .... வடியும் இரத்தம் ....!!! நரகத்தில் வாழ்வேன் சொர்கத்தில் வாழ்வேன் ... உன் பதிலில் இருக்கு ...!!! குடிப்பதற்கு மது ... துடிப்பதற்கு மாது .... என்னவளே நீ ... மதுவும் மாதுவும் ....!!! கே இனியவன் - கஸல் 81

கே இனியவன் - கஸல் 80

ரத்தமாய் . சிவந்திருக்கிறது என் வீட்டு ரோஜா நீ தந்ததாலோ ...? என் இறந்த இதயத்தின் -மேல் காதல் கவிதை ..... எழுத சொல்கிறாயே ....!!! நீ .... எனக்குபன்னீர் .... தெளிக்கவேண்டும் ... கண்ணீர் தருகிறாய் ....!!! + கே இனியவன் - கஸல் 80

கே இனியவன் - கஸல் 79

நீ என்னில் வாழ்வதும் நான் உன்னில் வாழ்வதும் -தான் காதல்....! என் பிரிந்தாய் ...? குத்துவிளக்கு.. ஏற்றினாலும்... மின்விளக்கு... ஏற்றினாலும்... வெளிச்சம் .... ஒன்றுதான் ... வசதிக்காய் ... காதல் செய்யாதே ...!!! நீ பேசினாலும் பேசாவிட்டாலும் வலிப்பது என் இதயம் தான் கே இனியவன் - கஸல் 79

கே இனியவன் - கஸல் 78

நான் இறந்தால் ... புதைப்பார்களா ...? எரிப்பார்களா ...? என்றோ அவளின் .... வார்த்தையால் ... சாம்பலாகி விட்டேன் ...!!! அழகுக்கு அழகுதருவது காதல் உண்மைதான் ... உன்னோடு இருக்கும் .. காலத்தில் உணர்ந்தேன் ...!!! தட்டிய தீக்குச்சி விரைவாக அணைந்துவிடும் அந்த மன வேதனைதான் எனக்கும் ...!!! கே இனியவன் - கஸல் 78

கே இனியவன் - கஸல் 77

நீ மூட்டிய காதல் தீயை -நீயே கண்ணீரால் அணைக்க சொல்லுகிறாய்...!!! வீட்டு தோட்டத்தில் பூத்தும் வாடியும் ... இருக்கும் மலர்கள் ... உன்னை நினைவுக்கு ... கொண்டு வருகிறது ....!!! உயிர் பிரிந்தபின்பும் வாழும் ஒரே ஒரு விடயம் காதல் ...!!! கே இனியவன் - கஸல் 77

கே இனியவன் - கஸல் 76

உன்னை காதலிக்க .... என் துடிக்கிறது இதயம் .... உன் இதயமோ நடிக்கிறது ...!!! என் காதல் சுமையை இறக்கி வைக்க -நீதான் என் காதல் சுமைதாங்கி....!!! நினைப்பதெல்லாம்..... நடக்கிறது.....!!! காதலிலும் நடக்கும் .... தோல்வியில் ....? உன் திருமணத்தில் ....? கே இனியவன் - கஸல் 76

கே இனியவன் - கஸல் 75

பூந்தோட்டத்துக்கு ஏன் போகவேண்டும்  பூவாக நீயிருக்கையில்...? உடைந்த .... கண்ணாடியாய் ...... உன் முகம் -அதிலும் ... கண்ணீருடன் ...!!! உன் நினைவு.... காயமுன் வந்துவிடு....? கனவிலோ..... நிஜத்திலோ ..!!! கே இனியவன் - கஸல் 75

கே இனியவன் - கஸல் 74

என்றோ ஒருமுறை ..... என்னை நீ திரும்பி .... அழைப்பாய் ..... உன் மூச்சு நான் ....!!! பிரிந்துவிட்டாய் சந்தோசம் ....!!! நினைவில் நிற்கிறாய் சந்தேகம்.....!!! மீண்டும் வருவாயோ ...? பிரிந்தது வேறு .... பிரிப்பது வேறு.... நீ பிரிந்தாயா ....? என்னை பிரித்தாயா ....? கே இனியவன் - கஸல் 74