இடுகைகள்

கவிப்புயல் இனியவன் கஸல் - 950

உன்னிடம் இருந்து ... கற்று கொண்டேன் ... பிரிவு வரும் போது .... சிரித்து விட்டு செல்ல ....!!! மூச்சு  திணறுகிறேன் ....! என்னை நினைக்கிறாயா ...? திட்டுகிறாயா ...? பூக்கும்  வரை காத்திருந்த  வண்டு வாடிப்போனது .... பூவில் தேனில்லாமல் ... நான் உன்னிடத்தில் ... வாடியதுபோல் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 950

கவிப்புயல் இனியவன் கஸல் - 949

உன்னை பகலில் .... பார்ப்பதை விட .... இரவில் பார்ப்பதே .... அதிகம்.... அந்தளவுக்கு இருண்டு .... காணப்படுகிறது .... காதல் .....!!! காதல் குப்பை - நான் நீ உருண்டோடும் ... வெள்ளம் .... அப்படியென்றாலும் ... என்னை உன்னோடு ... அழைத்துச்செல் ....!!! ஆயுள் வரை காத்திருப்பேன்.... நீ காதலிக்க தயார் என்றால் ....!!!  ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 949

கவிப்புயல் இனியவன் கஸல் - 948

எனக்கு காதல் புதிரானது கண்ணீர் பன்னீரானது வார்த்தைகள் காயங்கள் ஆனது ....!!! நான் உன் கண்ணில்... ஒளியை தேடுகிறேன் ... நீயோ என் கண்ணில் ... ஒளியை பறிக்கிறாய் ....!!! தயவு செய்து பேசிவிடாதே -உன் மௌனத்தில் இன்பம் காண்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 948

கவிப்புயல் இனியவன் கஸல் - 947

நேரில் மௌனம் கனவில் பேச்சாளர் எத்தனை நாட்களுக்கு இந்த தண்டனை ...? அவ்வப்போது முகில் வந்து நிலாவை மறைப்பதுபோல் ... உன் வருகை ....!!! பூவின் இதழ்கள் உதிர்வதுபோல் உன் நினைவுகள் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 947

கவிப்புயல் இனியவன் கஸல் - 946

நீ சொல்ல தவிர்க்கும் -சொல் நான் தவிக்கும் -சொல் காதல் ....!!! உன்னால் கொஞ்சம் பன்னீர் கொஞ்சம் கண்ணீர் தவிக்கிறேன் ....!!! இரண்டு இதயங்கள் கண் மூடி உறி உடைத்த கதை நம் காதல் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 946

கவிப்புயல் இனியவன் கஸல் - 945

மஞ்சள் நிறத்தில் ... காதல் செய்தேன் ... குங்குமம் என்னை ... பிரித்து விட்டது ...!!! வற்றி போகும் நதியில் ... முத்து குளிக்க சொல்கிறாய் .... செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!! எல்லோர்  காதல் வலியும்.... ஒன்றுதான் -காயங்கள்... மட்டுமே மாறுகிறது ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 945

கவிப்புயல் இனியவன் கஸல் - 944

என் மூளையை ... பரிசோதிக்க வேண்டும் ... என்னையே நினைப்பதில்லை....!!! என் கண்ணீர்த்துளிகள் .... உனக்கு முத்துகள் ... மாலையாய் கோர்கிறாய் ...!!! சின்ன துவாரத்தை ... அடைக்காமல் விட்டேன் ... இதயத்தை விட்டு ... வெளியேறிவிட்டாய் ....!!!   ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 944

கவிப்புயல் இனியவன் கஸல் - 943

உன்னை காதலிக்கவேண்டும் என்பதற்காகவே காணாமல் போனவன் ...!!! காதலித்தபோதுதான்.... உன் சுயரூபம் கண்டேன் ... தவிக்க விடவே காதல் .... செய்திருகிறாய்....!!! உனக்கும் எனக்கும் இடைவெளி ... ஒன்றால் மட்டுமே .... இணையும் -காதல் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 943

கவிப்புயல் இனியவன் கஸல் - 942

நீ தண்ணீராய் .... இருந்தால் போதாது ... தாகத்தையும்..... தீர்க்க வேண்டும் ...!!! பிறர் துன்பத்தில் கண் கலங்கும் நீ என் துன்பத்தில் பங்குகொள் ......!!! நீ காதல் மலராகவும் ... துரத்தி குத்தும் .... தேனி வண்டாகவும் ... இருகிறாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 942

கவிப்புயல் இனியவன் கஸல் - 941

உன் உணர்வுகளையும் என் உணர்வுகளையும் தொலைத்து பெற்றதே காதல் ....!!! நீ கண்ணீரால் பேசுகிறாய் நான் கவிதையாய் எழுதுகிறேன் ....!!! ஒருதலை காதல் வலி இருதலை காதல் வலி இக்கரைக்கு அக்கறை பச்சை .....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 941

கே இனியவன் - கஸல் 115

நீயும் நானும் பிரிந்து போகலாம் என் காதல் கவிதை பிரியாது -உன் நினைவுகள் என்னோடு வாழ்வதால் ஆழத்தில் இருக்கும் திமிங்கிலம் அடிக்கடி மேலே வந்து சுவாசிப்பதுபோல் உன்னை நான் பார்க்க ஏங்குகிறேன் இதயமே .. நான் உன்னால் காயப்ப இதயம் உனக்கு ஏன் இதற்கு மேல் இதயம் ...??? + கே இனியவன் - கஸல் 115

கே இனியவன் - கஸல் 114

உன்னிடம் நான் தப்புவதென்றால் ... வேறு வழியே இல்லை காதல் செய்தே ஆகணும் ...!!! என் கவிதை வரிகள் உனக்கு காதல் வரி எனக்கு காலன் வரி ...!!! என் சோகத்தை கேட்டு சோகமே அழுகிறது நீ சுமகாய் வாழ்கிறாய் இதயத்தில் ....!!!  + கே இனியவன் - கஸல் 114

கே இனியவன் - கஸல் 113

இதயத்துக்கு அருகில் வரும் போது கதவை சாத்துகிறாய் -நான் கதவை பலமாக ... தட்டுகிறேன் ....!!! இன்று போய் நாளை வா என்று சொல்ல நான் ராவணனும் அல்ல.... நீ ராமனுமல்ல....!!! என் இதயக்கதவு மட்டுமல்ல வீட்டு வாசல் கதவும் திறந்திருக்கிறது....!!! + கே இனியவன் - கஸல் 113

கே இனியவன் - கஸல் 112

உன் கண் செய்த .. வித்தையே - காதல்...! எனக்கு கண்கட்டி வித்தை ஆகிப்போனது .....!!! உடலில் ஒன்பது வாசலையும் மூடுகிறேன் எப்படி வந்தாய் .... இதயத்துக்குள் ....?? காதல் ஒரு வான சாஸ்தியம் மின்னலும் வரும் இடியுடன் மழையும் வரும் ....!!1 + கே இனியவன் - கஸல் 112

கே இனியவன் - கஸல் 111

நீ வீதி விளக்கு சிவப்பு வெளிச்சம் நான் விதி விலக்கு பச்சை விளக்கு....!!! செக்கு மாடுபோல் உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் உன் வேக வண்டிக்கு நான் பொருத்தமானவன் அல்ல .. பிரிந்து செல்லும் நீ திரும்பி பார்க்கவில்லை உன் இதயம் எனக்கு கைகாட்டுகிறது + கே இனியவன் - கஸல் 111