முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 30 - 40

நீ 
காதல் விளக்கு... 
அருகில் வருகிறேன்..... 
அணைந்து விடுகிறாய் ....!!!

ஒற்றை பார்வை ....
பார்த்தாய் அதுதான் ....
ஒற்றையாய் நிற்கிறேன் ....!!!

கறை படிந்த துணியில் ....
அழுக்கு இருப்பதுபோல் ....
என் இதயத்தில் நீ .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 31


-----------

அப்படியே 
நினைத்து பார்க்கவே ....
பயமாக இருக்கிறது 
நம் காதலை .....!!!

ஓடாமல் இருக்கும் 
மணிக்கூட்டில் நான் ...
நிமிட முள்ளாய் ...
இருந்தென்ன பயன் ....?

அணைத்தேன் துன்பம் ...
அழைத்தேன் இன்பம் 
நீ அருகில் இருப்பதை ...
விட தூர இரு .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 32


----------
நீ 
புல்லாக வளர்ந்து விடு ....
நான் எருதாக வந்து ...
மேய்ந்து விடுகிறேன் ....
அப்போதாவது நாம் ...
இணைவோம் .....!!!

நீ 
கண்ணை தான் ....
சிமிட்டினாய் ....
கல் பட்ட கண்ணாடி ....
ஆகிவிட்டேன் ......!!!

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தில் நீ 
துடிப்பது போதும் ....!!!

முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 33


--------------

நான் கண்ணால் ...
காதல் கோலம் ....
போடுகிறேன் -நீ 
கண்ணீரால் .....
அழிக்கிறாய்.....!!!

காதலில் 
பூக்கள் சிரித்ததை 
விட வாடியதுதான் 
அதிகம் .......!!!

உனக்கு நான் 
காதலன் உறவு 
நீ எனக்கு எப்போ ...?
காதல் .......
உறவாகப்போகிறாய் .....?

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 34


-------------

உன் இதயம்.... 
மர்மதேசம் ......
புரியாத புதிர் -நீ ....!!!

நடந்துவந்தேன் 
வீதியால் -உன் 
சிரிப்பில் தடக்கி 
விழுந்துவிட்டேன் ....!!!

காதல் கிணற்றில் ....
மூச்சு திணறுகிறேன்.....
காப்பாற்றுவாய் ....
என்றால் அமுக்கி ...
விடுகிறாய் ......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 35


-------------

வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)

வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)

அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 36


-----------

வெள்ளத்தில் கத்தும் ....
தவளைக்கு ஒரு இரவு ....
இன்பம் .....
உன்னை பார்த்த ....
ஒரு இரவு எனக்கு ....
துன்பம் .....!!!

ஈர்ப்பால் கோள்கள் ....
சுற்றுகிறது ....
மோதியத்தில்லை ....
உன் ஈர்ப்பில் ...
சுற்றும் நான் ....
காயப்பட்டு விட்டேன் ...!!!

ரோஜா சிவப்பு ....
கொடுத்த இதயத்தில் ....
இரத்தம் வடிவத்தால் ....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 37


------------

நான் 
இரவு நேர இதய ....
காவலாளி .....
கனவில் கூட நீ 
வருவதை தடுக்க ....!!!

உன் 
நினைவுகளால் .....
இதயத்தில் தாஷ்மஹால் ...
காட்டுகிறேன் ....
வலிகள் தான் செலவு ....!!!

காற்றில் உரசும் ....
மரக்கொப்புக்கு உள்ள ....
இன்பம் கூட நமக்குள் ....
இல்லை .....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 38


------------

சிரிப்பதற்கும் ....
அழுவதற்கும் ...
சிறந்த பயிற்சி ....
காதல் ................!!!

துணிந்து ....
செல் வெற்றி ....
என்கிறது உலகம் ....
காதலை தூக்கி ....
எறிகிறது...........!!!

நான் ...
முறிந்து விழுந்த மரத்தில் ...
ஈரம் உள்ளவரை .....
துளிர் விடுவேன் .....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 39


------------

கடல் ......
கரையில் இருந்து ....
அக்கரையை பார்க்கும் ....
போது நிலமும் வானமும் ....
முத்தமிடும் .....
நம் காதலை போலவே .....
எல்லாம் மாயை ......!!!

பூவில் .....
இருக்கும் தேனும் .....
பூவின் கீழ் இருக்கும் ....
முள்ளும் நீதான் .....
எப்படி போடுகிறாய் ....
வேஷம் ......?

கடல் கரையில் ....
தோன்றிய நம் காதல் ....
அலைபோல் வந்து வந்து ....
போகிறது .......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 40


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்