கவிப்புயல் இனியவன் கஸல் 920 - 930

இதய தீபத்தை ....
அணைத்து விட்டாய் ...
மீதி எண்ணையில் ....
கசியும் வரிகள் தான் ...
என் கவிதைகள் ....!!!

இதுவரை 
பூக்களின் மேல் ....
நடந்து வந்தவன் ....
முற்களின் மேல் .....
நடக்கப்போகிறேன் ....!!!

நீ 
என்னை விட்டு .....
போகப்போகிறாய் .....
என்பதை அறிந்து ....
இதயம் அழத்தொடங்கி....
விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன்

தொடர் பதிவு கஸல் - 921
-----

வா 
நிம்பதியை தொலைத்து ...
காதல் வழியே போவோம் ...!!!

பாவம் காதல் ....!!!
காதல் இல்லாத இரண்டு ....
இதயத்துக்கு நடுவில் ...
தத்தளிக்கிறது ....!!!

கண்ணீரை ....
என் கண்ண்கூட ....
விரும்ப்பவில்லை ....
வழிந்தோடுகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 922
----
இணையாத ....
நம் காதல் ....
எங்கிருந்து ,,,,,
அழுதுகொண்டிருக்கும் .....?

இறைவனையும் ....
காதலையும் ....
அழுதுதான் பெறவேண்டும் ....
வேறு வழியில்லை ....!!!

தன் வலிமையை ....
பார்க்கமுடியாத ...
குதிரையின் கடிவாளம் ....
போல் நீயும் காதலை ....
பார்க்கவில்லை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 923
--------
காதல் விடி வெள்ளி ....
அருகில் மின்மினிகளை ...
இணைத்து பிரகாசமாய் ....
இருக்கிறது ....!!!

உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!!!

நீ காதல் ஜுரம் ....
தொற்றிக்கொண்டே ...
இருக்கிறாய் ...
தொல்லை கொடுத்து ...
கொண்டே இருக்கிறாய்....!!! 

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 924
--------
நினைத்துக்கொண்டே ....
இருக்க இனிக்கும் காதல் ...
உன்னை நினைத்ததும் ....
கண்ணீரும் இனிக்கிறது ....!!!

நிலாவில் பேசுவது ....
காதலுக்கு அழகு ...
எதற்காக நண்பகலில் ....
பேச ஆசைப்படுகிறாய் ....?

வானமும் பூமியும் ....
என்று இணைகிறதோ ...
அன்று நீயும் நானும் ...
நிச்சயம் சேர்வோம் ....!!!



கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம் 
தொடர் பதிவு கஸல் - 925
----------
நீ 
எனக்காகவே பிறந்தவள் ....
நான் 
உனக்காக இறக்கிறேன் ....!!!

உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!!!

எத்தனை காலம் 
கடிகாரம் முள் போல் ...
சுழண்டு கொண்டே...
இருப்பது ....!!!



கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம் 
தொடர் பதிவு கஸல் - 926
--------
நீ அழகுதான் ...
எனக்கு வேண்டாம் ....
முடிந்தால் காதல் -தா ....!!!

கடித்து 
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!!!

ஏன் தத்தளிக்கிறாய்...?
துடுப்பு நான் இருக்கிறேன் ...
உன்னை காப்பாற்றுவேன் ...!!!



கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம் 
தொடர் பதிவு கஸல் - 927
-----------
உன் காதல் மறுப்பை ....
பார்த்து நான் மட்டும் ....
அழவில்லை - தோழியும் ....
கண்ணீர் வடிக்கிறாள் ....!!!

என்னில் மறைந்திருந்த ....
காதலை உன்னில் ....
கண்டுகொண்டேன்.....!!!

என்னை..... 
கருவறையில் ....
சுமந்த தாயையும் ....!
இதயத்தில் ....
சுமந்த உன்னையும் .....!
கல்லறைவரை சுமப்பது ....
காதலின் சுமைகள் ....!!!

^

கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 928
-----------
உலகில் எல்லோரும் ....
பிச்சைக்காரர்தான் .....
காதலரே அதிகம் ....!!!

நீ
அதிஷ்ரத்தின் ராணி 
நான் 
துர்அதிஷ்ரத்தின் ராஜா 
காதல் ராஜா ராணி ....
விளையாட்டு .....!!!

உன் 
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!!!

^

கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 929
----------
மின் துண்டிகபட்டபின் ...
மின் குமிழ் எரியும்.....
காத்துகொண்டு இருக்கும் ....
காதலன் நான் ....!!!

மூச்சாக காதல் செய் ...
மூச்சு போக காதல் செய் ....
காதலின் செயலே அதுதான் ....!!!

உன்னை 
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!!!

^

கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 930

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்