கவிப்புயல் இனியவன் கஸல் 930 - 940
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
இதயத்தின் ஈரம்
வற்றி துடிக்கும்
மீன் ஆனேன் ....!!!
வைரம்
கண்ணாடியை ....
வெட்டும் ...
மௌனம் காதலை ...
வெட்டும் .....!!!
நீ......
எப்போதும்...
மென்மையானவள்....
கண்ணீர்
மென்மையானது
உன்னைப்போல் .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 931
வற்றி துடிக்கும்
மீன் ஆனேன் ....!!!
வைரம்
கண்ணாடியை ....
வெட்டும் ...
மௌனம் காதலை ...
வெட்டும் .....!!!
நீ......
எப்போதும்...
மென்மையானவள்....
கண்ணீர்
மென்மையானது
உன்னைப்போல் .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 931
--------
காதலில் மேதை ...
ஆனவனும் உண்டு ....
போதையானவனும் உண்டு ....
நீ என்னை பேதையாக்கி
விட்டாய் .....!!!!
காதல் தேன் கூட்டை ...
கட்டியதும் நீ
கல்லெறிந்ததும் நீ
காதல் தேன் போல் ....
வழிந்தோடுகிறது .....!!!
பொருள் காணாமல் ...
போனால் களவு ....
மனம் காணாமல் ...
போனால் காதலாம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 932
ஆனவனும் உண்டு ....
போதையானவனும் உண்டு ....
நீ என்னை பேதையாக்கி
விட்டாய் .....!!!!
காதல் தேன் கூட்டை ...
கட்டியதும் நீ
கல்லெறிந்ததும் நீ
காதல் தேன் போல் ....
வழிந்தோடுகிறது .....!!!
பொருள் காணாமல் ...
போனால் களவு ....
மனம் காணாமல் ...
போனால் காதலாம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 932
-------------
சூரியன் கிழக்கே ....
தோன்றி மேற்கே ....
மறையுமாம் ....
நீயும் முகத்தில் ....
தோன்றி -அகத்தில் ...
மறைந்தாய் ....!!!
நீ ஒரு விலாங்கு மீன்
எனக்கு தலையையும் ...
குடும்பத்துக்கு ....
வாலையும் காட்டுகிறாய் ....!!!
நீ
கலங்கரை விளக்கம் ....
நான் கப்பல் ....
உன் உதவியில்லாமல் ....
கரைசேர முடியாது .....
விட்டு விலகி விடாதே ....
எனக்கு நேராகவே இரு ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 933
தோன்றி மேற்கே ....
மறையுமாம் ....
நீயும் முகத்தில் ....
தோன்றி -அகத்தில் ...
மறைந்தாய் ....!!!
நீ ஒரு விலாங்கு மீன்
எனக்கு தலையையும் ...
குடும்பத்துக்கு ....
வாலையும் காட்டுகிறாய் ....!!!
நீ
கலங்கரை விளக்கம் ....
நான் கப்பல் ....
உன் உதவியில்லாமல் ....
கரைசேர முடியாது .....
விட்டு விலகி விடாதே ....
எனக்கு நேராகவே இரு ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 933
---------
என்னை குப்பை ...
என்கிறாய் ....
அப்போ கூட்டி அள்ளி ...
எடுத்துவிடு என்னை ....!!!
ஒவ்வொரு.....
திருமணத்துக்கு .....
பின்னாலும் ஒரு கண்ணீர்
கதை திரைப்படமாய் ....
ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!!
காதல் ஓட்டை வீட்டில் ....
இருக்கிறேன் ....
மழையாக வந்து என்னை ....
நனைத்துவிடு .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 934
என்கிறாய் ....
அப்போ கூட்டி அள்ளி ...
எடுத்துவிடு என்னை ....!!!
ஒவ்வொரு.....
திருமணத்துக்கு .....
பின்னாலும் ஒரு கண்ணீர்
கதை திரைப்படமாய் ....
ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!!
காதல் ஓட்டை வீட்டில் ....
இருக்கிறேன் ....
மழையாக வந்து என்னை ....
நனைத்துவிடு .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 934
----------
பட்ட
மரத்தில் சிறு ஈரம்
சிறு ஈரத்தில் படரும் ....
சிறு பாசிபோல் ....
உன் நினைவுகள் ...
என்னில் ஒட்டியபடி ....!!!
என் உள்ளத்தில் ...
உறங்கிகொண்டிருந்த ....
உன் நினைவுகள் .....
மெல்ல மெல்ல இறக்கிறது ....!!!
நூல் அறுந்த பட்டம் ....
மேலும் போகாமல் ....
கீழும் விழாமல்
தத்தளிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 935
மரத்தில் சிறு ஈரம்
சிறு ஈரத்தில் படரும் ....
சிறு பாசிபோல் ....
உன் நினைவுகள் ...
என்னில் ஒட்டியபடி ....!!!
என் உள்ளத்தில் ...
உறங்கிகொண்டிருந்த ....
உன் நினைவுகள் .....
மெல்ல மெல்ல இறக்கிறது ....!!!
நூல் அறுந்த பட்டம் ....
மேலும் போகாமல் ....
கீழும் விழாமல்
தத்தளிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 935
------------
நான் மரபு - திருக்குறள்...
நீ நவீனம் - ஹைக்கூ ...
நம் காதல் கண்ணீர்....
கஸல் ......!!!
எழுதுகிறேன் ...
எழுத்து கருவி மறுக்கிறது ....
எழுத்து பிழை -நீ ......!!!
நினைவுகள் நரகம் ....
கவிதை சொர்க்கம் .....
காதலில் சொர்க்கத்தில் ....
மூழ்கி நரகத்தில் வாழ்வர் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 936
நீ நவீனம் - ஹைக்கூ ...
நம் காதல் கண்ணீர்....
கஸல் ......!!!
எழுதுகிறேன் ...
எழுத்து கருவி மறுக்கிறது ....
எழுத்து பிழை -நீ ......!!!
நினைவுகள் நரகம் ....
கவிதை சொர்க்கம் .....
காதலில் சொர்க்கத்தில் ....
மூழ்கி நரகத்தில் வாழ்வர் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 936
---------
கண் அசைத்து ...
காதல் வானவில் ...
ஆனாய்....
இதயம் கருகி .....
இருளானேன் ....!!!
நீ
சேற்றில் மலர்ந்த
மலர் - நான்
பூசாரி மலரை ....
உதிரப்பண்ணுகிறேன்....!!!
நீ ஓடம்
நான் துடுப்பு ...
காதல் தாழமுக்கம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 937
காதல் வானவில் ...
ஆனாய்....
இதயம் கருகி .....
இருளானேன் ....!!!
நீ
சேற்றில் மலர்ந்த
மலர் - நான்
பூசாரி மலரை ....
உதிரப்பண்ணுகிறேன்....!!!
நீ ஓடம்
நான் துடுப்பு ...
காதல் தாழமுக்கம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 937
-----------
பன்னீரால் காதல் ....
மழை பொழிவாய்...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் பொழிந்தாய் ....!!!
காதல்
சேர்ந்து வாழவே ....!
நமக்கேன் விலகி வாழ ....
ஆண்டவன் எழுதினான் ....!!!
உன் காதல்
என் உறவுகளை....
பிரித்து வைத்துவிட்டது ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 938
----------
நீ
என்னை
காயப்படுத்துவது ...
எனக்கு காயமல்ல ...
என் பாவத்தின் பதிவு ....!!!
காதல் தோல்வியில் ...
ஏன் விஷம் குடிக்கிறார்கள் ...?
காதலே விஷம் தானே ....!!!
காதல் திரையை ...
கிழித்தேன் ....
என்னை மீட்டு ...
விட்டேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 939
என்னை
காயப்படுத்துவது ...
எனக்கு காயமல்ல ...
என் பாவத்தின் பதிவு ....!!!
காதல் தோல்வியில் ...
ஏன் விஷம் குடிக்கிறார்கள் ...?
காதலே விஷம் தானே ....!!!
காதல் திரையை ...
கிழித்தேன் ....
என்னை மீட்டு ...
விட்டேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 939
------------
நீ ..
காதல் ....
கல்லால் எறிந்தால் .....
காயப்பட்டிருப்பேன் ....
கற்கண்டால் அல்லவா ...
எறிகிறாய்....!!!
சுண்டினால் ஓடிவரும் ....
நாய் குட்டிபோல் ...
உன் இதயம் சுண்டியது ....
வந்துவிட்டேன் ....!!!
நீ
என்ன ஆங்கிலேயர் ...
காலணித்துவ பெண்ணா ....
ஞாயிறு விடுமுறை
எடுகிறாய் ....?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 940
காதல் ....
கல்லால் எறிந்தால் .....
காயப்பட்டிருப்பேன் ....
கற்கண்டால் அல்லவா ...
எறிகிறாய்....!!!
சுண்டினால் ஓடிவரும் ....
நாய் குட்டிபோல் ...
உன் இதயம் சுண்டியது ....
வந்துவிட்டேன் ....!!!
நீ
என்ன ஆங்கிலேயர் ...
காலணித்துவ பெண்ணா ....
ஞாயிறு விடுமுறை
எடுகிறாய் ....?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 940
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக