இடுகைகள்

கே இனியவன் - கஸல் 34

மழை பெய்கிறது .. வெளியில் போகாதே .. மழைத்துளி .. காயப்படுத்திவிடும் ... இடிக்கு நான் பயந்தவன்  அல்ல  உன் வலியைவிட  ஒன்றும் கொடுமையானது  அல்ல  இறைவன் கூட  காதலில்  மயங்கித்தான்  இருக்கிறான் .. கே இனியவன் -  கஸல் 34

கே இனியவன் - கஸல் 33

கண் இரண்டு புண் .. நீதான் என் பார்வை .. இப்போது என்..  கண் இரு கண் .. காதல் ஒரு .. புதிய உலகம் .. படைத்தவனுக்கே...  புரியாத உலகம் ... வாழ்க்கையில் வலி  வேதனை  காதலில் வலி .. சாதனை ... கே இனியவன் -  கஸல் 33

கே இனியவன் - கஸல் 32

இறைவனின் .. திருவிளையாடலைப்பார்.. உன்னை மதுவாக.. படைத்து -என்னை .. போதையாக .. படைத்துவிட்டான்..!!! உன்னை பார்த்ததை;;  விட -பார்க்காமல்;;  இருந்திருந்தால்;;  மேல் ;; உன்னை மறக்க... நினைத்து ... மறக்க துடித்துக்கொண்டு .. இருக்கிறேன் ...!!!  கே இனியவன் -  கஸல் 32

கே இனியவன் - கஸல் 31

இறைவனின் .. திருவிளையாடலைப்பார்.. உன்னை மதுவாக.. படைத்து -என்னை .. போதையாக .. படைத்துவிட்டான்..!!! உன்னை பார்த்ததை;;  விட -பார்க்காமல்;;  இருந்திருந்தால்;;  மேல் ;; உன்னை மறக்க... நினைத்து ... மறக்க துடித்துக்கொண்டு .. இருக்கிறேன் ...!!!  கே இனியவன் -  கஸல் 31

கே இனியவன் - கஸல் 30

நீ கண்ணீர் விடும் வரை .. காத்திருக்கிறேன் .. கண்ணீராக நான்..  வருவதால் .. ஆனந்தம்..!!! தயவு செய்து .. மௌனமாக இரு . குழப்பிவிடாதே.. என்னை .. நான் உன்னை மூச்சாக .. பார்க்கிறேன் நொடிப்பொழுதில்  வந்துகொண்டிருப்பாய்  நின்றுவிடாதே  கே இனியவன் -  கஸல் 30

கே இனியவன் - கஸல் 29

உன் பார்வை என்னை .. குருடாக்கி விட்டது.. அதனால் தான் -நான்  உன்னை தினமும் பார்க்க .. ஆசைப்படுகிறேன் .. உன் காதல் மீது  ஏறி நின்று -என்  காதலை தேடுகிறேன்  துளசியைப்போல்  நான் -உனக்கு  முழுநேரமும்  மூச்சு தருகிறேன் .. கே இனியவன் -  கஸல் 29

கே இனியவன் - கஸல் 28

என் இறந்த காலம் தான் .. நான் உயிரோடு இருந்தேன் .. அப்போது நீ என்னை..  காதலிக்கவில்லை .. காதல் செடி என்று  நினைத்தேன் -அது  விருட்சம் என்று இப்போது  புரிந்து கொண்டேன்  நீ என் ஆழமான  அதிசயமான கடல்  உன் துறைமுகத்தை நான்  அடையும் வரை கே இனியவன் -  கஸல் 28

கே இனியவன் - கஸல் 27

நான் பல் புடுங்கிய  வெறும் பாம்பு  மகுடியும் நீ  வாசிப்பதும் நீ  பாம்புக்கூடையும் நீ  சந்தன கட்டையை  தேய்த்தால் வரும்  வாசனை நம் காதல்  உலக அதிசயம் கேள் என் கண்ணுக்குள் -நீ  வானவில்  கே இனியவன் -  கஸல் 27

கே இனியவன் - கஸல் 26

பூ இதழ் மீது விழும்  கதிரவன் ஒளி போல்  நம் காதல் -காலையில்  ஒருவிதம் -மாலையில்  ஒருவிதம்  நான்  நன்னீர் குடிப்பதா ..? வெந்நீர் குடிப்பதா ..? என்பது -உன் கையில்  பரீட்சை மண்டபத்தில்  நான் வினா  நீ விடை  திருத்துபவர் -காதல்  கே இனியவன் -  கஸல் 26

கே இனியவன் - கஸல் 25

உன் காதலும்  என் காதலும்  நம் காதலும்  எப்போது கைகூடும்  மழைத்துளியில்  அடிக்கடி தோன்றும்  நீர் குமுழி போல் நம்  காதல்  நீ என் நாள் தேதி  கலண்டர் அல்ல  மாதாந்த தேதி கலண்டர்  நினைவுகளால் மாதமாகிறேன் கே இனியவன் -  கஸல் 25

கே இனியவன் - கஸல் 24

நீ சூரிய உதயத்தின் பின்- இருட்டு  நான் சந்திர உதயத்தின்  பின்- பகல்  ஏக்கத்தோடு வாழுது  நம் காதல்  நீரில் தீப்பந்தம்  எரிகிறது  நிலத்தில் மீன்  வாழுகிறது -நம்  காதல் நிலை  இன்றோ நாளையோ  உன்னிடமிருந்து  காதல் மழை பொழியும்  காத்திருக்கும்  தோகை மயில் நான்  கே இனியவன் -  கஸல் 24

கே இனியவன் - கஸல் 23

உன்னால் .. கொஞ்சம் கொஞ்சமாக  மாற்றப்படுகிறேன் .. மறக்கப்படுகிறேன்  மறைக்கப்படுகிறேன்  நீ வல்லினமான  சொல்  மெல்லினமான  செயல்  இடையினமான  வலி  கொழுந்து விட்டு எரியும்  காதலுக்கு  தண்ணீர் போல் கண்ணீர்  கே இனியவன் -  கஸல் 23

கே இனியவன் - கஸல் 22

நான் காதலில்  தவழும் குழந்தை-நீ  நடைவண்டி -உன்  துணை எப்போதும்  தேவை  விழுந்ததும்  அழும் குழந்தைபோல்  நான் அழுவதும் -நீ  தூக்கிவிடுவதும்  பூவின் மேல் அமரும்  வண்ணாத்திப்பூச்சியை  பிடிக்க நீயோ  துப்பாக்கியை  பயன்படுத்துகிறாய்...  கே இனியவன் -  கஸல் 22

கே இனியவன் - கஸல் 21

உண்பதற்க்கா உணவை .. எடுத்த வேளையெல்லாம்..  நீயோ என்னை உண்கிறாய்..  எப்படி நான் உயிர் வாழ்வது ..? நம் காதல்  மரணத்திலும்  முடியாத காதல்  காதலுக்கு ஏது.. மரணம்  நான் நினைக்கும் போது  நீ வரவில்லை  என்பதற்காக காதல்  இல்லையென்று கருத்தாகிடாது ...!!!  கே இனியவன் -  கஸல் 21

கே இனியவன் - கஸல் 20

உன்னோடு பேரூந்தில்  பயணம் செய்கிறேன்  பயணம் நீண்டு  செல்ல வேண்டும்  இடம் தெரியாமல்  நான் பூவின்  மென்மையில் இருக்கிறேன்  நீயோ -கள்ளி முள்  தொட்டுப்பார் என் உடலை  நெருப்பாய் கொதிக்கிறது  உன் நினைவுகள்  கே இனியவன் -  கஸல் 20