இடுகைகள்

கே இனியவன் - கஸல் 58

இரட்டை இதயம் ஒரு சுவாசம்..... ஒரு சுவாசம் -இரட்டை  உடல் தான் காதல் ...!!! நீ பின்னப்படும்.... கிடுகு.... நான் குறுக்கும்... மறுக்குமாக.... பின்னப்படுகிறேன்.... என்னை மீட்டுவிடு ....!!! நீ  என்னை .. கடந்து போனால் வறண்டுவிடுகிறது இதயம் ....!!! கே இனியவன் - கஸல் 58

கே இனியவன் - கஸல் 57

நீ இலகுவாக.... பிரிந்து சென்றுவிட்டாய்.... நீ அன்பாய் தந்த மலர் .... அழுகிறது ....!!!! இதயத்தில் இருந்து .... பாயப்போகிறேன்.... என்று அடம்பிடிக்கிறாய் .... பாய்ந்து விடு உயிரே ... உன் பாதங்கள் கவனம் ....!!!  வானத்திலும் ஏழுநிறம் .... நான் விடும் கண்ணீரிலும் ... ஏழுநிறம் -அவை .... துன்பங்களின் வர்ணம் ...!!! கே இனியவன் - கஸல் 57

கே இனியவன் - கஸல் 56

உனக்கு.... பயந்து நான்..... பாதையை.... மாற்றிவிட்டேன்.... வாழ்க்கையை.... மட்டுமல்ல.... தெருவையும் ....!!! உனக்குஉலகவிருது... கொடுக்க வேண்டும்.... காதல் ஆடை அழகாக  அலங்காரத்துக்கு.... அடிக்கடி மாற்றுவதற்கு ...!!! கண்ணீரில்..... விளக்கு எரியும்..... என்னை நினைத்துப்பார் ..... ஒளிதோன்றும் ...!!! கே இனியவன் - கஸல் 56

கே இனியவன் - கஸல் 55

உனக்கு .. காதலில் மரியாதை கிடைக்கும் என்றால் நான் உன்னை விட்டு விலகவும் தயார் ... கடலுக்குள்... எறியப்பட்ட... கல் நீ....... எப்படி உன்னை .... தேடுவது ...? சிபி மன்னன் .. தன் உடலை... புறாவுக்கு சமனாக்கினார் நீ வந்தால் தான் நம் காதல் சமனாகும் ..!!!  கே இனியவன் - கஸல் 55

கே இனியவன் - கஸல் 54

எங்கு .... பார்த்தாலும் ..... தெரிவது...... உன் முகம் ....!!! உன்  அன்பின் ஆழத்தை.... காணமுடியாது... தெரிந்தும் .. துடிக்கிறேன்  ஆழத்தைபார்க்க....!!! நான் என்பது நீ... என்று அகராதியில்.... மாற்ற வேண்டும்... நமக்காக அல்ல.... காதலுக்காக ...!!! கே இனியவன் - கஸல் 54

கே இனியவன் - கஸல் 53

எனக்கு காதலே...... பிடித்தது இல்லை .... எப்படி -என்...... இதயத்துக்குள்...... வந்தாய் ...? இதமாக இருக்கிறது ..!!! என் .... இதய தடாகத்தில்..... நீச்சல் பழகுகிறாய்..... நான்....  மூழ்கித்தவிக்கிறேன்..... நீ  என்ன பேசினாலும்.... அர்த்தமாக உள்ளது...... நீ  என் அர்த்தமானவள் என்பதால் ...!!! கே இனியவன் - கஸல் 53

கே இனியவன் - கஸல் 52

காதல்  ஒரு தேன் கூடு தேனில் மது இருக்கும்  நீயும் போதையாகிறாய்.. எனக்கு ..!!! நீயும் நானும் காதலில் சூரிய சந்திரர்கள் ...!!! என்னை .... வட்டமிடுகிறாய்.... பருந்துபோல்... நான் தவிக்கிறேன்.... சிறகுடைந்த பறவையாய் ....!!! கே இனியவன் - கஸல் 52

கே இனியவன் - கஸல் 51

நீ  எனது வினா . நான்  உன் வினா  விடைதான் புரியாத  காதல் ...!!! நான் நங்கூரம்  உடைந்த கப்பல்  நீ  எங்கே துறைமுகமாக  இருக்கிறாய்  நம் காதல்  கண்ணீரால்  கட்டப்பட்ட  கண்ணீர் மாளிகை  கே இனியவன் -  கஸல் 51

கே இனியவன் - கஸல் 50

நீ மீன் தொட்டி  நான் அதிலுள்ள மீன்  வெளியே போக முடியாது  என்பதால் உன்னையே  சுற்றி சுற்றி வருகிறேன்  உனக்காக -ஒரு  ஜீவன் அழுகிறது என்றால் .. என்னைவிட நீ யாரை சொல்வாய்  நீ போதையுடன் .. விஷம் உண்டால் நிச்சயம்  இறப்பு தான் ... தெரிந்தும் குடிக்கிறேன்  கே இனியவன் -  கஸல் 50

கே இனியவன் - கஸல் 49

இரவில் விளக்கை .. விரைவில் அணைத்துவிடுவேன்  எங்கே நீ கனவில்  வராமல் விட்டுவிடுவாயோ  என்ற பயம் தான்  வா  பௌணமி நிலவில் .. ஒழித்து பிடித்து  விளையாடுவோம்  அமாவாசை அன்று  நேருக்கு நேர்  பேசுவோம்  உனது முன்னாள்  காதலன்  இந்நாள் கணவன்  கே இனியவன் -  கஸல் 49

கே இனியவன் - கஸல் 48

காதலில் நாம்  ஓட்டைப்பானை  நீ என்னை நிரப்பு  நான் உன்னை  நிரப்புகிறேன் நான் உன் காலில் மெட்டி  போடவிருமபுகிறேன் நீ விலங்கு போட  விரும்புகிறாய்  நீ தயவு செய்து  காதலிக்காதே  பார்த்ததிலேயே  இத்தனை தொல்லை என்றால் காதலித்தால் ..??? கே இனியவன் -  கஸல் 48

கே இனியவன் - கஸல் 47

நான் இரவில்  தனியாக பேசுவேன்  விடியல் காலை  அதுதான் பத்திரிகையில்  கவிதை  நீ  பனிக்கட்டி  உனக்கில்லை  குளிர்  நீ சூடில்லாத  நெருப்பு  நான் நெருப்பில்லாத  சூடு  கே இனியவன் -  கஸல் 47

கே இனியவன் - கஸல் 46

காதலில் தோற்றவன் .. கண்ணீர் விடுகிறான் காதலை விரும்புபவன் கண்ணை தேடுகிறான் நான் இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கிறேன் .... நான் எரிகிறேன் நீயோ சூரிய குளியல் குளிக்கிறாய் நான்  என் இஸ்ரத்தை சொன்னேன் -அவள் தன கஸ்ரத்தை  சொன்னாள் ...!!! கே இனியவன் -  கஸல் 46

கே இனியவன் - கஸல் 45

நீ  பூவாகவும்  மென்மையாகவும்  இருக்கிறாய் -பூவின்  சிரிப்பும் வாட்டமும்  தெரிகிறது உன்னில்  சில வேளையில்  கல்யாணி ராகம்  சிலவேளையில்  பூபாளராகம்  நானோ சோகம்  நீ பிரிந்து சென்ற பின்  என் வாழ்வில்  முழு நிலா  வந்ததே இல்லை  கே இனியவன் -  கஸல் 45

கே இனியவன் - கஸல் 44

நான் பின்னும் வலை .. உன் கண் மீனுக்காக .. இல்லை . கண்ணீருக்காக நான் உன்னை  காதலிக்க வில்லை  நீ விட்டுவிட்டு போனால்  தோல்வியை உனக்கு  முன்பே விரும்பிவிட்டேன்  நான் வென்றும் விட்டேன்  இரவு நட்சத்திரம் போல்  உன் நினைவுகளும்  மின்னுகின்றன  கே இனியவன் -  கஸல் 44