இடுகைகள்

நீ என்ன இதயமா ..?

நீ என்ன இதயமா ..? மூளையா ...? இதயம் என்றால் .. மறக்க மாட்டாய் ....!!! உன் வலிகளுக்கு பயந்து ... மறதியின் இடத்தில் வாழ்கிறேன் ....!!! காதல் தனித்துவமானது ... அதில் நீயோ மகத்தவம் ... உடனுக்குடன் வலி .. தருகிறாய் ...!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 738

காதலால் வந்த வலிகள் ..

என் ஒவ்வொரு வரியும் ... காதலால் வந்த வலிகள் .. உன் கையில் இருக்கிறது ... இன்பம் ....!!! காதல் ஒரு பிரபஞ்சம் எல்லையில்லை ... எப்படி உன்னை நான் .. புரிவது ...? காதலுக்கு பின்னால் இத்தனை ஆபத்தா ...? வா  நீந்துவோம் ... ஆபத்து கடலில் ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 737

காதல் ரோஜாவை ...

காதல் ரோஜாவை ... தந்தேன் -நீ காதல் .. ரோஜா முள்ளை வைத்திருக்கிறாய் ....!!! உன் காதல் சிலந்தி .. வலையில் சிக்கிய பூச்சி .. நான் உன்னால் இறக்கவும் .. முடிவு செய்துவிட்டேன் ...!!! மயானத்தின் அருகே ... இருக்கிறேன் -நீ சொல்லும் பதிலுக்காக ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 736

படாத பாடு படுகிறேன்....!!!

சொல்  காதல் கடல் நீரா ...? இளநீரா ..? எனக்கு பன்னீர்  உனக்கு...? ஒருபுறம் நினைவு  மறுபுறம் கனவு  நீ மகுடி  நான் பாம்பு  படாத பாடு படுகிறேன்....!!! நீ அழுதத்தை  நம்பிவிட்டேன்  கண்ணீர் என்று ....!!! கசல் 605

நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!

காதல் உனக்கு  கற்பூரம் எனக்கு  தீபம்  நிலைத்திருக்கிறேன் ...!!! யோசித்து வருவதில்லை  காதல்  யோசிக்காமல் உன்னை  சந்தித்தேன்  உணர்ந்து கொண்டேன்  தவறை ....!!! இளநீர் போல் உன்னை  இதயத்தில் வைத்திருக்கிறேன்  நீ கண்ணீராய் வருகிறாய் ...!!! கஸல் 604

கஸல் 250

உன்னை கண்டவுடன் .. என் உயிர் மொழியே .. மறக்கிறது......!!! வனத்தில் பறக்கும் ... ஊர்குருவி போல் .. காதலை கத்தித் திரிகிறாய் ... பயனில்லை ....!!! உன்னை நினைக்கும் .. நேரமெல்லாம் -ஒரு  கண் கண்ணீரையும் ... மறுகண் பன்னீரையும் .. வடிக்கிறது கண்ணே ...!!! கஸல் 250

கஸல் 249

மெழுகு திரியாய் .. உருகுகிறேன் .. நீ  விட்டில் பூச்சியாக கூட .. மாறவில்லை ....!!! வா இருவரும் .. ஆகாய முகிலுக்குள்  முத்தமிடுவோம் ...!!! நீ அழுவது .. வைரக்கல் .. நான் அழுவது .. மாணிக்கக்கல் ....!!! கஸல் 249

கஸல் 248

காதலும் நீ  காதலியும் நீ  என்றுதானே இருந்தாய் ...!!! எப்போதென்ன என்னிடம் .. காதல் மட்டும் இருக்கிறது ....??? கண்ணுக்குள்....  கண்ணீர் மட்டுமல்ல ... இரத்தமும் இருக்கிறது ... மறந்து விடாதே ....!!! நான் வடக்கு திசை .. நீ தெற்கு திசை ... எப்படி இணைவது ...??? கசல் 248

கஸல் 247

இன்று காதல் பரீட்சை ... எழுதினேன் ... விடையும் நீ ... வினாவும் நீ ... நான் கண்ட பூக்களில் .. அடிக்கடி மலரும் பூ ... உன் சிரிப்பு ...!!! வருமானம் இல்லாதவன் .. வீட்டில் அடுப்பு எரியாதது போல் .. நீ இல்லாத இதயத்தில் ... நினைவுகள் -இல்லை 

கஸல் 246

காதலில் தற்கொலை... முட்டாள்களின் முடிவு ... தற்கொலை செய்தவுடன் .. அவர்கள் காதல் அழிவதில்லை ,.... அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!! காலையில் இளம் .. சூரியன் நீ .. ஏன் இப்படி ... சுட்டெரிக்கிறாய் ....? நீ நிலவும் ... சூரினனாகவும் .. இருந்தால் ... வானத்தில் எனக்கு ... என்ன வேலை ...?

கஸல் 245

நான்....நீ...!!! நீயார் ...? நீ ...நான் .....!!! நான் யார் ...? காதல் அழகும் ... அழுக்கும் நிறைந்தது ... ஆனாலும் அழகு ...!!! என்னை நானே .. தேடுகிறேன் .. உன்னில் இருப்பதை .. மறந்துவிட்டேன் ....!!! கஸல் 245

கஸல் 244

நான் ... உன்னை காதலிக்க .. முன்னரே உன் நிழலையே .. காதலித்தேன் ...!!! காதல் கண்ணுக்கு தெரியாது .. கண் பார்க்கமல் வராது ...!!! காதல் வலிக்காமல் இனிக்காது ...!!! கண்ணே ... கப்பல் கடலில் தான் ... மிதக்கனும்... காற்றில் அல்ல ...!!! கஸல் 244

இதயம் வலியால்.. துடிக்கிறது ....!!!

நீயே ... காதல் நாயகியாகவும் .. இருக்கிறாய் .. காதல் வில்லியாகவும் .. இருக்கிறாய் ...!!! நான் வணங்கிய.. கடவுளிடம் கேட்பதெல்லாம் .. உன்னைத்தான் ...!!! தயவு செய்து .. என்னிடம் இருந்து ... விலகிவிடு ...  என் இதயம் வலியால்.. துடிக்கிறது ....!!! கஸல் ;243

இதய கண் தான்...

இதய கண் தான்...  என் முக கண்ணைவிட .. இதய கண் தான்...  உன்னை அதிகளவு ... பார்த்திருக்கிறது ....!!! என் காதலில் நீ  என்றும் இருப்பாய் ... இதயத்தில் மறைந்தாலும் ...!!! காதல் கற்பூரம் போன்றது ... பிரகாசமாக எரியும் ... விரைவில் அழிந்துவிடும் ...!!! கஸல் 242

மன காயப்படும் போது ...

மன காயப்படும் போது .. . நான் .. காதலுக்காக ஏங்குகிறேன் ... நீ  காதல் சொல்ல தயங்குகிறாய் ... வயிறு பசியில் அழுகிறது ... கண் கண்ணீருக்காக அழுகிறது .. மனம் காதலுக்காக அழுகிறது ... மன காயப்படும் போது ... யார் ஆறுதல் சொல்வார்கள் .. என்று எங்கும் மனம் போல் .. உன்னை தேடுகிறேன் ...!!! கஸல் 241