இடுகைகள்

நிரந்தர தூக்கம் -42

என் தோட்டத்தில் ஒவ்வொரு பூவும்   உன் முகம்   ஒவ்வொரு மலர்வும் உன் சிரிப்பு   பகலில் சந்திரனால்   கவிதை எழுதுகிறாய்   இரவில் சூரியனால்   வாசிக்கிறாய்   தேடிய கண்கள்   களைத்து விட்டன   நீ வராது விடின்   நிரந்தர தூக்கம்   kaSal ;42

360 பாகை கஸல் ; 36

என் முகத்தில்   உன்னை பூந்தோட்டமாக   வளர்க்கிறேன்   அடிக்கடி பூக்கிறாய்   வாடுகிறாய்   பாலைவனத்தில்   தண்ணீராக உன்   சிரிப்பு   உன்னை விட்டு விலகும்   பாதை   360 பாகை   கஸல் ; 36

உன் கண்ணில் தான் உள்ளது ; கஸல் 35

என்னை கண்டு   ஓடி வந்த நீ   இப்போ நீ   ஓடிப்போகிறாய்   தவறை ஏற்றுக்கொண்டதற்கு   நன்றி   என் கண்ணீரில்   எரியும் திரி   செய்துகொண்டிருக்கிறாய்   இதயக்காயத்தை   ஆற்றும் மருந்து   உன் கண்ணில் தான் உள்ளது   கஸல் ; 35

கண்ணாடி மாளிகைக்கு - கஸல் ;34

உன்னை காதலித்த   என் இதயத்தை   சாட்டையால்   அடிக்கிறேன்   உன்னை கண்ட பின்   எனக்காக பலவறை   பலவற்றை சேர்கிறேன்   ஏனடி கல் எறிகிறாய்   என் காதல்   கண்ணாடி மாளிகைக்கு   கஸல் ;34

நினைக்கிறேன் - கஸல் 33

உன்னை மட்டும்   நினைத்துக் கொண்டிருப்பதற்காக   கோமாவில் இருக்கிறேன்   ஏனடி நீ   என் கண்ணீர் துளிகளில்   நீச்சல் அடிக்கிறாய்   நீ   நேரே வருகிறாய்   நானோ அதை ஆவியாக   நினைக்கிறேன் கஸல் ; 33

ஆடி ஆடி விழுகிறேன் கஸல் தொடர் 32

நீ   இந்து சமுத்திரம்   நான் உன்னுள்   திமிங்கிலம்   நீ இரவு   நான் கனவு   இருவரும் இணைவது   நல் இரவு   உன்னால்   முச்சை அறுந்த பட்டம்   ஆடி ஆடி விழுகிறேன்   கஸல் ;தொடர் 32

காதல் கடிதம் - கஸல் தொடர் 31

காலில் உள்ள   சலங்க்கைபோல்   மினுமினுக்கிறது   சலசலக்கிறது காதல்   ஒவ்வொரு பெரு மூச்சும் உன் பெயரை உரத்து சொல்லும்   ஒலி உனக்கும் எனக்கும்   காதல் சமாதன புறாவை   நினைவு படுத்த நான் எழுதும்   காதல் கடிதம்   கஸல் ;தொடர் 31

இதயக்கதவை - கஸல் ;தொடர் 30

தாமரை இலையில்   தண்ணீர் போல்   அழகாக இருக்கிறது   நம்காதல் -இணையாமல்   நான்   இதயக்கதவை   மூடினால் எங்கே போய் வாழ்வாய் ... நான் இரவு   அழுத அழுகைதான்   காலை புல்வெளியில்   பனித்துளி ...!!!   கஸல் ;தொடர் 30

இது உலக அதிசயம் -கஸல் ;தொடர் 28

நான் இதுவரை தனியே   பேசினேன்   நீயோ என்னோடு   பேசுகிறாய்   என்னைப்பொறுத்தவரை   இது உலக அதிசயம்   காதலும்   வெங்காயமும்   ஒன்றுதான்   காதலுக்காக   மயானம் கட்டினால்   பிணங்கள் அதிகம் எரியும்   கஸல் ;தொடர் 28

நம் காதல் - கஸல் ;தொடர் 27

நான் சிரித்துக்கொண்டு   காதலிக்கிறேன்   நீ அழுதுகொண்டு   காதலிக்கிறாய்   காதல் சொர்க்கமும்   நரகமும்   சொன்னவர்   ஞானிகள்   நம்   காதல்   விண்ணையும்   மண்ணையும் போன்றது   கஸல் ;தொடர் 27

திறப்பு துருப்பிடிக்கிறது - கஸல் தொடர் 26

உன் காதல்   விலாங்கு மீன்   பெற்றோருக்கும்   எனக்கும்   நீ சிரித்தால்   நான் சேமிக்கும்   சில்லறை உண்டியல்   நீ பூட்டி வைத்திருக்கும் இதயக்கதவு திறப்பு   துருப்பிடிக்கிறது   உனக்காக எழுதும் கடிதம்   நட்சத்திரத்தால்   எழுதப்படுகிறது   கஸல் தொடர் 26

காதல் வலியால் - கஸல் ; தொடர் 25

காதல் வலியால் நான் கத்துகிறேன்   உலகம் கவிதை   என்கிறது வலியை உன்னோடு நான்   சிவசக்க்தியாக   வாழவிரும்பவில்லை   சிவன்   சக்தி   உன் ஊரில் ஏன் காளையர்கள்   குருடர்கள் ஆனார்கள்   என் கண்ணில் பட்டுவிட்டாய்   கஸல் ; தொடர் 25

கவிதைக்கு அழகு -கஸல் ;தொடர் 24

உன் கண் மை   கண்ணுக்கு அழகு   கண்ணீர் மை என்   கவிதைக்கு அழகு   சவக்குழிக்குள்   சல்லாபம் செய்ய   விரும்புகிறாய்   துருப்பிடித்த   ஜன்னைப்பிடித்து   நிலாவை ரசித்துக்கொண்டு   இருக்கிறாய்   கஸல் ;தொடர் 24

காதல் நினைவு - கஸல் தொடர் 23

காதலுக்காக   உறவை மறக்கிறேன்   இறைவா இவனைக் காப்பாற்று   அன்னையின் புலம்பல்   அம்புலியில் இருக்கும்   பாட்டிபோல் உன்   காதல் நினைவு   என்னுள்   பெருவெள்ளத்தால்   திறக்கப்பட்ட திரிகை   போல் நீ   கட்டில்லாமல் உன்   நினைவு   கஸல் தொடர் 23

கஸல் தொடர் 22 - என்னை சிறையில் வை

என் கண்ணீரால்   காதல் வளர்கிறது   சந்தோசம் உன் காதல்   மரம் வளர்கிறது நீ அருகில் நின்றால்   பேசுவத்தில்லை நான் போசும் போது   நீ அருகில் இல்லை   உன் கண்கள் காவல்   செய்யும் போது   நான் கள்வனாகிறேன் என்னை சிறையில் வை   கஸல் தொடர் 22