கே இனியவன் - கஸல் 81 - 90

கண்ணீர் 
வெறும் தண்ணீர் .....
அது உனக்கே ....!
எனக்கோ ...
இதயத்தில் ....
வடியும் இரத்தம் ....!!!

நரகத்தில் வாழ்வேன் 
சொர்கத்தில் வாழ்வேன் ...
உன் பதிலில் இருக்கு ...!!!

குடிப்பதற்கு மது ...
துடிப்பதற்கு மாது ....
என்னவளே நீ ...
மதுவும் மாதுவும் ....!!!

கே இனியவன் - கஸல் 81

^^^

கவலையிலும் ...
சிரிக்க கற்றுதந்தவள் ....
கவலையை விட ....
எதையும் கற்று தராதவள் ...!!!

என் 
இதய சுற்றோட்டம்
இரத்தத்தால் -இல்லை
உன் நினைவால் தான்
இயங்குகிறது....!!!

நான் 
அவசர சிகிச்சையில்....
நீ உயிர் விடும் மூச்சு ...!!!
+
கே இனியவன் - கஸல் 82

^^^

என் கவிதைகள்...!
காதலர் இடையில் ....
பிரபல்யம் -கவிதை....
நன்றாக இருப்பதல்ல.....
நம் காதல் சோகம் ...
அவர்களுக்கும் ....
பொருந்துகிறது ....!!!

நீ எப்போதே...
சென்று விட்டாய்...
என் இதயம் நான் ....
சொன்னாலும் ....
நம்புவதாய் இல்லை ...!!!

மீண்டும் வந்தாய் ....
காதலியாய் இல்லை ....
வானத்து தேவதையாய் ...
உயிரே உன்னிடம் நானும் ....
விரைவில் வருவேன் ....!!!

+
கே இனியவன் - கஸல் 83

^^^

நீ 
என்னோடு...
வாழுகிறாய் .....
நமக்கிடையே மௌனம்....
வாழுகிறது ....
பிரிவை தடுக்கிறது....!!!

உன் 
ஒவ்வொரு பார்வையும்
எனக்கு கவிதை
உன் மௌனம் ....
எனக்கு மரணம் ....!!!

காதலில் நான் ....
காற்று போன வண்டி .....
காற்றோடு நீ வந்தால் ...
இயங்குவேன் ....!!!

+
கே இனியவன் - கஸல் 84


^^^

நீ 
நிலா 
நான் நட்சத்திரம் ....
அமாவாசையிலும் ....
இருப்பேன் ....!!!

உன் சிரிப்பு ...
இதயசிறையை...
உடைத்தெறிந்து....
விட்டது....!!!

காதலால் ....
தரையில் துடிக்கும்...
மீனாகவும்....
கூட்டில் அடைபட்ட....
கிளியாகவும் இருக்கிறேன் .....!!!

+
கே இனியவன் - கஸல் 85


^^^

நான் 
வெறும் கடதாசி ..
நீ தான் அதில் உள்ள ..
கவிதை வரிகள் ...
நீ இல்லையென்றால் ...?


நான் வெறும் ..
துரிகை -நீ தான் ...
அதில் ஓவியம் ....
கொஞ்சம் சிரித்துகொள் ...!!!

நான் ...
வெறும் உடல்....
நீ தான் என் உயிர் ...
நீ 
பிரியப்போகிறாய் 
என்கிறாயே -என்னை 
பற்றி கொஞ்சமேனும் 
சிந்தித்தாயா ....???

+
கே இனியவன் - கஸல் 86


^^^

நீ எனக்காக 
படைக்க பட்டவள் ...
நான் உனக்காக ...
இறக்கபோகிறவன்...!!!

உன்னை ..
அடையமுடியாத ...
அதிஸ்ரசாலி ....!!!

இரவுக்கு இருள் அழகு ..
இருண்ட காதலுக்கு நீ 
அழகு ....!!!
காதலுக்கு கவிதை அழகு ....
கண்ணீருக்கு நீ அழகு ...!!!

+
கே இனியவன் - கஸல் 87


^^^

பொருத்தமில்லாதது ..
பொருந்தாது ..
பொருந்தக்கூடியது
பொருந்தாமல்
இருக்காது
பொருத்தமானவளா ...?
பொருந்தாதவளா...?

தாமைரை இலையில்....
தண்ணி நிற்காது என்கிறாய்...
தாமரையே தண்ணீரில் தான்...
இருக்கிறது.....
நான் உன்னோடு கண்ணீரில் ...
நிற்பதுபோல் ....!!!

நீ என் பகலும் இரவும்.....
மீண்டும் என்னிடம் நீ...
வரத்தான் வேண்டும் ....
பகலில் இருளாய் இருக்கிறேன் ....
இருளில் பகலாய் இருக்கிறேன் ...!!!

+
கே இனியவன் - கஸல் 88


^^^

காதல் 
நல்லதும் இல்லை ....
கெட்டதுமில்லை....
தயங்கினாய் ....
தவிக்கிறேன் ....!!!

காதல் 
சுதந்திர பறவை ...
உன்னை ....
காதலித்தேன் ....
படும் வேதனை போதும் ...!!!

காதலுக்கு ..
கண்ணில்லை 
இதயமில்லை 
பேச்சில்லை 
என்றால் -காதலில் 
என்னதான் இருக்கிறது ..???

^^^


உன்னை நினைக்கும் போது ..
கவிதை என்னைவிட்டு போகிறது
கவிதை எழுதும் போது -நீ 
என்னைவிட்டு போகிறாய் ...!!!

உன்னை நேரில் பார்ப்பதை ....
மறந்து வருகிறேன் ...
கவிதையில்,, கனவில் ....
அழகாய் இருகிறாய் ....!!!

காதலில் விழுந்து 
கதறுகிறேன் ....
என்னை காதலில் ...
இருந்து எடுத்துவிடு ...!!!

+
கே இனியவன் - கஸல் 90

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983