கே இனியவன் - கஸல் 21 to 25

உண்பதற்க்கா உணவை ..
எடுத்த வேளையெல்லாம்.. 
நீயோ என்னை உண்கிறாய்.. 
எப்படி நான் உயிர் வாழ்வது ..?

நம் காதல் 
மரணத்திலும் 
முடியாத காதல் 
காதலுக்கு ஏது..
மரணம் 


நான் நினைக்கும் போது 
நீ வரவில்லை 
என்பதற்காக காதல் 
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!! 


கே இனியவன் -  கஸல் 21
^^^

நான் காதலில் 
தவழும் குழந்தை-நீ 
நடைவண்டி -உன் 
துணை எப்போதும் 
தேவை 

விழுந்ததும் 
அழும் குழந்தைபோல் 
நான் அழுவதும் -நீ 
தூக்கிவிடுவதும் 

பூவின் மேல் அமரும் 
வண்ணாத்திப்பூச்சியை 
பிடிக்க நீயோ 
துப்பாக்கியை 
பயன்படுத்துகிறாய்... 

கே இனியவன் -  கஸல் 22


^^^

உன்னால் ..
கொஞ்சம் கொஞ்சமாக 
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன் 
மறைக்கப்படுகிறேன் 


நீ வல்லினமான 
சொல் 
மெல்லினமான 
செயல் 
இடையினமான 
வலி 

கொழுந்து விட்டு எரியும் 
காதலுக்கு 
தண்ணீர் போல் கண்ணீர் 
கே இனியவன் -  கஸல் 23


^^^

நீ சூரிய உதயத்தின்
பின்- இருட்டு 
நான் சந்திர உதயத்தின் 
பின்- பகல் 
ஏக்கத்தோடு வாழுது 
நம் காதல் 

நீரில் தீப்பந்தம் 
எரிகிறது 
நிலத்தில் மீன் 
வாழுகிறது -நம் 
காதல் நிலை 

இன்றோ நாளையோ 
உன்னிடமிருந்து 
காதல் மழை பொழியும் 
காத்திருக்கும் 
தோகை மயில் நான் 

கே இனியவன் -  கஸல் 24


^^^

உன் காதலும் 
என் காதலும் 
நம் காதலும் 
எப்போது கைகூடும் 

மழைத்துளியில் 
அடிக்கடி தோன்றும் 
நீர் குமுழி போல் நம் 
காதல் 

நீ என் நாள் தேதி 
கலண்டர் அல்ல 
மாதாந்த தேதி கலண்டர் 
நினைவுகளால் மாதமாகிறேன்

கே இனியவன் -  கஸல் 25

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்