கே இனியவன் - கஸல் 61 - 70

நீயும் நானும்
பிரிந்து போகலாம்....
கவலைப்படாதே ....
உன்னையும் என்னையும் ....
கவிதை இணைக்கும் ...!!!

என் 
உள்ளே இருக்கும் - நீ ..
அடிக்கடி வெளியில் ...
எடிப்பார்கிறாய் ...? 

உயிரே ..
நான் உன்னால்
காயப்பட்ட இதயம்...
எனக்கு ஏன்...? 
இதற்கு மேல் இதயம் ...???

கே இனியவன் - கஸல் 61

^^^

உன் 
கண்ணின்
பார்வையிலிருந்து
நான் தப்பவே
முடியாமல் ....
காயப்பட்டு விட்டேன் ...!!!


என் 
கவிதை வரிகள்
அனைத்தும் நீ தந்தவை 
நீ தந்தவை இப்போ ...
ஏனோ வலிக்கிறது ...!!!

என் 
சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது....!!!

கே இனியவன் - கஸல் 62

^^^

நான் 
இதயத்துக்குள்
வரும் போது கதவை
மூடுகிறாய் ....!!!

இன்றுபோய் நாளை வா
என்று சொல்ல நான்
ராவணன் அல்ல...!!!

என் 
இதயக்கதவு
மட்டுமல்ல
வீட்டு வாசல் கதவும்
திறந்திருக்கிறது.....
எப்போது வருவாய் ...?

கே இனியவன் - கஸல் 63

^^^

உன் 
கண் செய்த ..
வித்தை தான் ....
காதல் - வித்தை .....
வித்தாகி தழைக்கிறது ...!!!

உடலில் ஒன்பது
வாசலையும் மூடிவிட்டேன் 
எப்படி சென்றாய் ....?
என்னைவிட்டு ....!!!

மின்னலில் வரும்
முறிகோடுதான்
காதல் முகவரி
முடித்தால் முகவரிக்கு....
வந்துவிடு என்கிறாய் ...?

கே இனியவன் - கஸல் 64

^^^

நீ 
செதுக்கிய சிற்பமா ..?
இதயத்தையும் செதுக்கி ....
வைத்திருக்கிறாயோ ...?

செக்கு மாடுபோல்....
உன்னையே சுற்றி....
சுற்றி வருகிறேன்...
உன் வேக வண்டிக்கு.....
பொருத்தமானவன்அல்ல ..!!!

பிரிந்து செல்லும் - நீ
திரும்பி பார்க்கவில்லை...!
உன் இதயம் எனக்கு
கைகாட்டுகிறது ....!!!

கே இனியவன் - கஸல் 65

^^^

முதல் 
பார்வையில் காதல் ....
இரண்டாம் பார்வையை ....
இன்றுவரை தேடுகிறேன் ...!!!

தேனியைப்போல்...
உன் நினைவுகளை.....
சேர்க்கிறேன் ....
நீயோ ....
தேனிபோல் கொட்டுகிறாய் ,,,!!!

நிலாவில்.....
சேர்ந்திருக்கிறோம்....
நிலாவே உன்னை...
எட்டிப்பார்க்கிறது......
உண்மைதானா நம் காதல் ...?

கே இனியவன் - கஸல் 66

^^^

நான்
காதலில் எரிகிறேன்
நீயோ காதல் 
மழையில் நனைகிறாய்....!!!

அழுவதை
தடுக்க காதலின்
ஒரு விதியும் இல்லை....
காதலரின் சதியே ...!!!

என் 
ஒவ்வொரு கனவும்
உனக்கு எழுத்தும் 
காதல் காவியம் ....!!!

கே இனியவன் - கஸல் 67

^^^

நீ
ஆடையை மாற்று....
ஆளை மாற்றாதே ....
கவிதை கண்ணீர் ....
விட்டு அழும் ....!!!

உடலில் வாசனை ....
அழகுதரும் .....
எனக்கு நீ உள்ளத்தால் ....
வாசனை செய் ....!!!

தரையில்
கண்டெடுத்த -காசுபோல்
உன் காதல் கடிதம்
பலகோடி பணம் ...!!!

கே இனியவன் - கஸல் 68

^^^

காதலுக்கு ..
ஆதாம் ஏவாள்
காலத்தை சொல்ல்வார்கள்
அதற்கே காதல்தான் காரணம்

நீ சிலநேரம்
குளிந்த நீர்
வெந்நீர்
குட்டைநீர்

காதல் கடலின்
ஆழத்துக்கே
எடுத்து செல்லுகிறது
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காதலை இல்லை
கடல் ஆழத்தையாவது

கே இனியவன் - கஸல் 69

^^^

நான் யாரோடு
பேசினாலும் .....
என் கண்ணிலும் ...
இதயத்திலும் -நீ 

தொழுவத்தில்
கட்டிய மாடு போல்
எங்கு சென்றாலும்
உன்னிடமே திரும்பி
வந்துவிடுகிறேன் ....!!!

கூட்டி கழித்துப்பார்...
காதலின் தொடக்கமும் 
வாழ்க்கையின் பயணமும்
வலியின் வழியால் செல்கிறது ...!!!

கே இனியவன் - கஸல் 70

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்