கே இனியவன் - கஸல் 36 - 40

தாமரை
அல்லி
மல்லிகை
மலர்வதற்கு 
சூரிய சந்திரர் வருகையை 
எதிர்பார்ப்பதுபோல் -நானும் 

தூங்கனாங்குருவிக்கூட்டில் 
இருக்கும் மின்மினிபூச்சிப்போல் 
நீ என் இதயத்தில் 

பல யுகங்களின் தவம் 
மனிதப்பிறப்பு 
பல நினைவுகளின் தவம் 
நீ காதலியாக ... 

கே இனியவன் -  கஸல் 36

^^^

கொடியது கொடியது 
காதல் கொடியது 
அதனிலும் கொடியது 
உன் காதல் எனக்கு 
கொடியது 

இனியது இனியது 
தனிமை இனியது 
அதனிலும் இனியது 
உன்னால் நான் 
தனிமையானது 

வலியது வலியது 
என் காதல் வலியது 
அதனிலும் வலியது 
நீ தந்த வலியானது

கே இனியவன் -  கஸல் 37


^^^

என் கண்ணீர் துளிகள் ..
உன் வீட்டுப்பூக்கள் ..
அழகாகவும் இருக்கிறது ,,
விரைவாகவும் வாடுகிறது ....

நெருப்பின் மீது ..
போடப்பட்ட கற்பூரம் -நான் 
வாசமாகவும் ..
விரைவாகவும் ..
எரிகிறேன் ..

இரண்டு கறுப்பு ..
சந்திரன் இருப்பது ..
உன் முகத்தில் தான் ...!!!



கே இனியவன் -  கஸல் 38


^^^

என் காதல் 
குச்சியில் இருக்கும் 
ஐஸ் போன்றது 
இப்போ -குச்சி 
என்னிடம் இருக்கு 
ஐஸ்சைக்கானவில்லை ..


மனம் என்னும் -என் 
வயிறு பசிக்கிறது 
நீ 
சமைக்கவில்லை 
என்கிறாய் 

சிறுவயதில் 
நடந்த நிகழ்வு 
கனவில் வந்ததுபோல் 
நீ வருகிறாய் 
மங்கலாக ...!!!



கே இனியவன் -  கஸல் 39


^^^

தாமரை மலர்வதை ..
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..

உன் காதல் சுமையால் 
நான் வண்டிக்குள் சிக்கிய 
தவளையானேன் ..

நீ வெளியில் வரும்போது 
மட்டும் காதல் உடை 
போட்டுக்கொண்டு 
வருகிறாய் 



கே இனியவன் -  கஸல் 40

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்