கே இனியவன் - கஸல் 41 - 45

நீ என் 
கைதொலைபேசி 
வைத்திருக்கவும் 
முடியல்ல 
விட்டுட்டு வரவும் 
முடியல்ல 


காற்றாடியை 
போட்டுவிட்டு 
தீபத்தை பார்க்கிறாய் 
நான் படும் வேதனை 


கற்பத்தையும் 
காதலையும் 
மறைக்கவே 
முடியாது 



கே இனியவன் -  கஸல் 41

^^^

நீ 
தொடர்ந்தும் -என் ..
ஆசையாக- இரு...
அப்போதுதான் -உன்னை ...
தொடர்ந்து ...
ஏங்கிக்கொண்டிருப்பேன் ...

கனவு ஒரு சிறகு 
நினைவு ஒரு சிறகு 
பறக்கிறேன் நடுவானில் 
தொலைந்து போவதற்கு 

கண்ணே நீ 
என் கனவுகளின் ராணி 
நினைவுகளின் மகா ராணி 



கே இனியவன் -  கஸல் 42

^^^


நீ தரும் வேதனைகள்...
நீவரும் போது வருவதில்லை...
நீ -போகும் போது ...
போவதுமில்லை ...!!!

என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை


என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது
சில வேளை கண்சிட்டுகிறது..!!!



 கே இனியவன் -  கஸல் 43

^^^

நான் பின்னும் வலை ..
உன் கண் மீனுக்காக ..
இல்லை .
கண்ணீருக்காக

நான் உன்னை 
காதலிக்க வில்லை 
நீ விட்டுவிட்டு போனால் 
தோல்வியை உனக்கு 
முன்பே விரும்பிவிட்டேன் 
நான் வென்றும் விட்டேன் 

இரவு நட்சத்திரம் போல் 
உன் நினைவுகளும் 
மின்னுகின்றன 

கே இனியவன் -  கஸல் 44

^^^

நீ 
பூவாகவும் 
மென்மையாகவும் 
இருக்கிறாய் -பூவின் 
சிரிப்பும் வாட்டமும் 
தெரிகிறது உன்னில் 

சில வேளையில் 
கல்யாணி ராகம் 
சிலவேளையில் 
பூபாளராகம் 
நானோ சோகம் 

நீ பிரிந்து சென்ற பின் 
என் வாழ்வில் 
முழு நிலா 
வந்ததே இல்லை 

கே இனியவன் -  கஸல் 45

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்