கவிப்புயல் இனியவன் கஸல் 151-160

நீ 
வெயிலா 
மழையா 
சொல்லிவிட்டு போ 

நான் சிலந்திபோல் 
உன் நினைவுகளால் 
வலைபின்னுகிறேன்
நீயோ -பூச்சி போல்
என்னை விழுங்குகிறாய் 

நான் மரணத்திலிருந்து 
விலகிவிட்டேன் 
உன் பிரிவில் இருந்து 
தப்பிவிட்டேன் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 151
---
இப்போது 
நான் கல்லூரிக்கு 
போவதில்லை -நீ 
வரும் பாதையை 
பார்த்துவிட்டு வீடு 
வருகிறேன் 

என் கையெழுத்தில் 
முதல் எழுத்தே -உன் 
எழுத்தாக மாறிவிட்டது 

எறிந்த சாம்பல் கூட 
என்மீதிவிழுந்து -உன் 
நாமத்தையே உச்சரிக்கிறது 



&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 152


--
நீ 
யாழ் வாசித்திருந்தால் 
என் ஊரின் பெயரில் 
உன்னை அழைத்திருப்பேன் 

இசையில் அருமையான 
இனிமைகள் இருக்க -என்னை 
சோககீதம் பாட சொல்லுகிறாய் 

காதல் இசையை போன்றது 
தன்னை மறந்து சிரிக்கவும் 
செய்யும் -அழவும் செய்யும் 



&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 153


--

நான் 
வைத்திய சாலையில்
இருக்கிறேன் -உன் 
கண்பட்டதால் ...!!!

நான் 
காதலில் கர்ணனாக 
இருக்கிறேன் -நீ 
கண்ணனாக வந்து 
காதலை தானம் 
கேட்கிறாய் 

காதலுக்கு 
இன்பமாக கட்டிய 
காவியக்கட்டிடம் 
எங்கே உள்ளது ...???



&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 154


---
என் மனம் உன் பார்வையால்
உடைந்து சுக்குனூராகிவிட்டது
கவலைப்படவில்லை
உடைத்தது நீ

என் காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன் அன்பு உன்னையும்
கடந்து என்மீது பட்டதால்தான்
இந்தவலி


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 155


---
வயலில் புற்கலாக‌
வளர்கின்றன‍
நான் பசுவாக‌ நின்று
மேய்கிறேன்

கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
நான் புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தை பார்ப்பேன்


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 156


----

என் கவிதைகள் 
உன்னை 
காயப்படுத்தியிருந்தால் 
மன்னித்துவிடு -கவிதையில் 
குற்றமில்லை -என் 
சிந்தனையில் தான் 
குற்றம் ....!!!

வா கண்ணே 
மறதியின் மூலத்துக்கே 
சென்று விடுவோம் 
நாம் எம்மை மறக்காமல் 
இருக்க 

உனக்காக நான்
என்னையே மறந்து 
விட்டேன் -தயவு செய்து 
என்னை தந்துவிடு 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 157


----

இறைவா உன்னை நான் 
நம்பவேண்டும் 
நேசிக்க வேண்டும் 
உணரவேண்டும் என்பதற்காகவே 
காதலிக்கிறேன் 
காதலின் முழுவடிவமும் 
நீதானே ...!!!

ஒருவனின் பிறப்புக்கு முன் 
பிறப்பிற்கு பின் இருப்பது 
காதல் மட்டும் தானே 

உன் ஒவ்வொரு சிரிப்பும் 
என் இதயம் படும் வேதனையை 
இறைவன் அறிவான் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 158


---

தண்டவாளம் 
சமாந்தரமாகத்தான் 
செல்லும் ஆனால் 
பயணம் நடைபெறவில்லையா ..?
காதலும் அப்படித்தான் ..!!!

நீ என்னை சிரிக்க வைத்தபோது ..
நான் எழுதிய கவிதையை விட 
என்னை அழவைத்த போது 
எழுதிய கவிதை 
இனிமையாக இருக்கிறது 
அதுதான் கஸல் என்கிறாயா ...?

பட்டுப்போன மரமும் 
செத்துப்போன மனசும் 
ஒன்றுதான் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 159


---

தமிழில் 
எந்த எழுத்தை 
எடுத்தாலும் -அது 
உன்னையே நினைவு 
படுத்துகிறது ...!!!

நீ 

என்மீது வைத்திருப்பது 
காதல் இல்லை -காதல் 
பைத்தியம் 

காதல் உடல் உளம் 
சார்ந்தது மட்டுமல்ல 
இறையுணர்வும் 
உடையது ....


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 160




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்