கே இனியவன் - கஸல் 111 - 120

நீ 
வீதி விளக்கு 
சிவப்பு வெளிச்சம் 
நான் விதி விலக்கு
பச்சை விளக்கு....!!!

செக்கு மாடுபோல்
உன்னையே சுற்றி
சுற்றி வருகிறேன்
உன் வேக வண்டிக்கு
நான் பொருத்தமானவன்
அல்ல ..

பிரிந்து செல்லும் நீ
திரும்பி பார்க்கவில்லை
உன் இதயம் எனக்கு
கைகாட்டுகிறது

+
கே இனியவன் - கஸல் 111

****

உன் 
கண் செய்த ..
வித்தையே - காதல்...!
எனக்கு கண்கட்டி 
வித்தை ஆகிப்போனது .....!!!

உடலில் ஒன்பது
வாசலையும் மூடுகிறேன்
எப்படி வந்தாய் ....
இதயத்துக்குள் ....??

காதல் 
ஒரு வான சாஸ்தியம் 
மின்னலும் வரும் 
இடியுடன் மழையும் வரும் ....!!1

+
கே இனியவன் - கஸல் 112

----

இதயத்துக்கு அருகில்
வரும் போது கதவை
சாத்துகிறாய் -நான்
கதவை பலமாக ...
தட்டுகிறேன் ....!!!

இன்று
போய் நாளை வா
என்று சொல்ல நான்
ராவணனும் அல்ல....
நீ
ராமனுமல்ல....!!!

என் இதயக்கதவு
மட்டுமல்ல
வீட்டு வாசல் கதவும்
திறந்திருக்கிறது....!!!

+
கே இனியவன் - கஸல் 113

----
உன்னிடம் 
நான் தப்புவதென்றால் ...
வேறு வழியே இல்லை 
காதல் செய்தே ஆகணும் ...!!!

என் 
கவிதை வரிகள்
உனக்கு காதல் வரி 
எனக்கு காலன் வரி ...!!!

என் 
சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது
நீ சுமகாய் வாழ்கிறாய் 
இதயத்தில் ....!!!

 +
கே இனியவன் - கஸல் 114
----

நீயும் நானும்
பிரிந்து போகலாம்
என் காதல் கவிதை
பிரியாது -உன்
நினைவுகள் என்னோடு
வாழ்வதால்

ஆழத்தில் இருக்கும்
திமிங்கிலம் அடிக்கடி
மேலே வந்து
சுவாசிப்பதுபோல்
உன்னை நான் பார்க்க
ஏங்குகிறேன்

இதயமே ..
நான் உன்னால்
காயப்ப இதயம்
உனக்கு ஏன் இதற்கு மேல்
இதயம் ...???
+
கே இனியவன் - கஸல் 115

----

நிலா 
போனாலும் ...
நட்சத்திரங்கள் ..
மறைவதில்லை 
அமாவாசையில் 
நீ நட்சத்திரம் ...!!!

உன் 
சிரிப்பு -என் 
இதயசிறையை
உடைத்தெறிந்து 
விட்டது 

உன் 
ஈர்ப்பால் 
தரையில் துடிக்கும் 
மீனாகவும் 
கூட்டில் அடைபட்ட 
கிளியாகவும் 
இருக்கிறேன் .....

+
கே இனியவன் - கஸல் 116

-----

நீ 
என்னோடுதான்
வாழுகிறாய் 
நமக்கிடையே மௌனம்
வாழுகிறது அது
பிரிவை தடுக்கிறது

உன் 
ஒவ்வொரு பார்வையும்
எனக்கு ஒவ்வொரு கவிதை
கவிதை களஞ்சியம் 
வரப்போகிறது

காற்றுப்போன வண்டியும்
நானும் ஒன்றுதான்
உன் இடத்தை விட்டு
நகராமல் இருக்க ...!!!

+
கே இனியவன் - கஸல் 117

----
கவிதைகள்
ரசிகர்கள் மத்தியில்
பிரபல்யம் -கவிதை
நன்றாக இருப்பதல்ல
நம் கதைதான் தங்கள்
கதையாம் ....!!!

நீ எப்போதே
சென்று விட்டாய்
நல்லகாலம் 
உன்காதலை
தந்துவிட்டு 
சென்றுவிட்டாய்

மீண்டும் வந்தாய்
நான் உன் காலை
பார்க்கிறேன் 
தேவதையோ

+
கே இனியவன் - கஸல் 118
----
என்ன நீ 
கவலையிலும் 
சிரிக்கிறாய் 
என்று கேட்கிறாயா ...?
ஏன் அழவேண்டும் 
நீ என் இதயத்தை
வைத்திருகிறாயே....!!!

இதய சுற்றோட்டம் 
இரத்தத்தால் -இல்லை 
உன் நினைவால் தான் 
இயங்குகிறது 

அவசர சிகிச்சையில் 
நான் -நீ டாக்டராக 
வருவாய் என்று 
போராடுகிறேன் 

+
கே இனியவன் - கஸல் 119

----
கண்ணீர் 
வெறும் தண்ணீர் அல்ல 
வெள்ளைநிறத்தில் 
இரத்தம்.....!!!

நரகலோகத்தில் 
வாழ்வதால் -எனக்கு 
சொர்க்க லோகம் 
கனவில் கூட 
இல்லை ....!!!

காதல் 
குடிப்பதற்கு 
மதுவல்ல 
போதை தரும் உயிர் 

+
கே இனியவன் - கஸல் 120


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்