கே இனியவன் - கஸல் 101 - 110

நீ வைரக்கல்
மின்னுவதில் அழகாய் 
கொல்லுவதில்....
விஷமாய் இருகிறாய் ...!!!

உன்னை சந்தித்தது
சூரிய உதயம் ...
உன்னை பிரிந்தது ....
சூரிய அஸ்தமனம் ....!!!

நீ
என்னை விட்டு
விலகமுன்
உன் எண்ணங்களை ...
என்னிலிருந்து விலக்கிவிட்டு ...
செல் உயிரே ....!!!

+
கே இனியவன் - கஸல் 101

^^^
நீ வானவில் 
நான் இரவு 
எப்படி உன்னை 
நான் பார்ப்பது ...?

கவிதை எழுதும் போது 
கற்பனை வரவில்லை 
என்றால் -உன்னை 
நினைப்பேன் 

நான் இறக்கவே 
மாட்டேன் 
என் இதயம் -உன் 
இதயத்துக்குள் 
மறைத்து வைத்திருக்கிறேன் 
+
கே இனியவன் - கஸல் 102

^^^
நீ
சிந்திவிடாத கண்ணீரை
உனக்கும் சேர்த்து நானே 
சிந்துகிறேன் ....!!!

என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது

என் தூக்கத்தை....
கனவு கலைக்கிறது...
என் வாழ்கையை ...
நீ கலைக்கிறாய் ....!!!

+
கே இனியவன் - கஸல் 103

^^^
உன் கண்ணால்
காதல் கோலம்
போடுகிறாய் -நான்
அதற்கு வர்ணம்
திட்டுகிறேன்

காதலில்
பூக்கள் சிரித்ததை
விட வாடியதுதான்
அதிகம்

உனக்கு நான்
காதலன் உறவு
நீ எனக்கு என்ன
உறவு ....?

+
கே இனியவன் - கஸல் 104

^^^

தாமரை மலர்வதை ..
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..!!!

உன் காதல் சுமையால்
நான் வண்டிக்குள் சிக்கிய
தவளையானேன் ..!!!

நீ 
வெளியில் வரும்போது
மட்டும் காதல் உடை
போட்டுக்கொண்டு
வருகிறாய் ....!!!

+
கே இனியவன் - கஸல் 105

^^^

நான் 
பின்னும் வலை ..
கண் மீனுக்காக ..
இல்லை .
கண்ணீருக்காக....!!!

நீ 
விட்டுவிட்டு போனால்
தோல்வியை உனக்கு
முன்பே விரும்பிவிட்டேன்
நான் வென்றும் விட்டேன்....!!!

இரவு நட்சத்திரம் போல்
உன் நினைவுகளும்
மின்னுகின்றன.....
விடிந்தபின் எல்லாம் மாயம் ....!!!

+
கே இனியவன் - கஸல் 106

^^^

நீ 
தரும் வேதனைகள்...
நீ தருவதில்லை .....
நீ தரும் இன்பம் ...
நீ தருவதில்லை ....
எல்லாம் காதல் தரும் ....!!!

என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை

என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது...!!!

+
கே இனியவன் - கஸல் 107

^^^

காதலியாக .....
இருக்காவிட்டாலும் .....
காதலாக இருந்துவிடு ....
அப்போதுதான் -உனக்காக 
ஏங்கிக்கொண்டிருப்பேன் ...!!!

கனவு ஒரு சிறகு
நினைவு ஒரு சிறகு
பறக்கிறேன் நடுவானில்
தொலைந்து போவதற்கு....!!!

கண்ணே நீ
கனவுகளின் ராணி
நினைவுகளின் மகா ராணி
காதலில் நீ யார் ....?

+
கே இனியவன் - கஸல் 108

^^^

காற்றில் ஆடும் 
தீபம் போல் ஆனேன் ....
நீ 
சொல்லும் சொல்லால் ...!!!

நினைக்கவும் ...
மறக்கவும் ....
பழகிய இதயத்துக்கு ....
நன்றி ....!!!

தனிமையில் அழுதேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல....
காதல் இல்லாமல் ...!!!

+
கே இனியவன் - கஸல் 109

^^^

பூவைப்போல் காதலும் ....
போராடி பூக்கும் ...
ஒரு நொடியில் கசங்கும் .....!!!

உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் மையாகவும் ....
வலிகள் எழுத்து கருவியாகவும் ....
இருக்கும் ....!!!

பூத்திருந்த காதல் ....
உத்திர தொடங்கிவிட்டது ....
உதிர்ந்திருந்த கனவு ...
தளிர் விடுகிறது ....!!!

+
கே இனியவன் - கஸல் 110

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்