கே இனியவன் - கஸல் 71 - 80

நீ என்னை
ஒதுக்க ஒதுக்க
என் கவிதை
ஓங்குகிறது

நானோ -உன்
ஆணிவேர்
எப்படி விலக்க முடியும்


நான் உனக்காக...
காத்திருந்த மணி....
என் ஆயுள் முறையும் ....
நேரமடி ....!!!

கே இனியவன் - கஸல் 71

^^^

உன்னால் உடைந்த
இதய சில்களை 
கொண்டு -காதல்
வீதி அமைக்கிறேன் ....
இடையிடையே ...
குத்துகிறது ....!!!

வலிதான் காதலின்
முதலீடு.....
கண்ணீர்தான் காதலின் 
வருமானம் ....!!!

என்று நீ என்னை
காதலித்தாயோ
அன்று முதல் -நான்
அழகை இழந்தேன் ....!!!

கே இனியவன் - கஸல் 72


^^^

மண்
பானை தண்ணீரும் 
காதலும் ஒன்றுதான் ....
குளிர்மையாது ....
அதிகமானால் ....
ஆபத்தானது .....!!!

காதலில் அழகு ...
சந்தோசம் ...
எச்சரிக்கை ....
சந்தேகம் ....!!!

நீ 
என் அருகே...
வந்தாலும்....
சென்றாலும்...
ஒன்றுதான்....
காதல் நினைவு...
வேண்டும்..... 
நீயல்ல.....!!!

கே இனியவன் - கஸல் 73


^^^

என்றோ ஒருமுறை .....
என்னை நீ திரும்பி ....
அழைப்பாய் .....
உன் மூச்சு நான் ....!!!

பிரிந்துவிட்டாய்
சந்தோசம் ....!!!
நினைவில் நிற்கிறாய்
சந்தேகம்.....!!!
மீண்டும் வருவாயோ ...?

பிரிந்தது வேறு ....
பிரிப்பது வேறு....
நீ பிரிந்தாயா ....?
என்னை பிரித்தாயா ....?

கே இனியவன் - கஸல் 74


^^^

பூந்தோட்டத்துக்கு
ஏன் போகவேண்டும் 
பூவாக நீயிருக்கையில்...?

உடைந்த ....
கண்ணாடியாய் ......
உன் முகம் -அதிலும் ...
கண்ணீருடன் ...!!!


உன் நினைவு....
காயமுன் வந்துவிடு....?
கனவிலோ.....
நிஜத்திலோ ..!!!

கே இனியவன் - கஸல் 75


^^^

உன்னை காதலிக்க ....
என் துடிக்கிறது இதயம் ....
உன் இதயமோ நடிக்கிறது ...!!!

என் காதல் சுமையை
இறக்கி வைக்க -நீதான்
என் காதல் சுமைதாங்கி....!!!

நினைப்பதெல்லாம்.....
நடக்கிறது.....!!!
காதலிலும் நடக்கும் ....
தோல்வியில் ....?
உன் திருமணத்தில் ....?

கே இனியவன் - கஸல் 76


^^^

நீ மூட்டிய
காதல் தீயை -நீயே
கண்ணீரால் அணைக்க
சொல்லுகிறாய்...!!!

வீட்டு தோட்டத்தில்
பூத்தும் வாடியும் ...
இருக்கும் மலர்கள் ...
உன்னை நினைவுக்கு ...
கொண்டு வருகிறது ....!!!

உயிர் பிரிந்தபின்பும்
வாழும் ஒரே ஒரு
விடயம் காதல் ...!!!

கே இனியவன் - கஸல் 77


^^^

நான் இறந்தால் ...
புதைப்பார்களா ...?
எரிப்பார்களா ...?
என்றோ அவளின் ....
வார்த்தையால் ...
சாம்பலாகி விட்டேன் ...!!!

அழகுக்கு
அழகுதருவது
காதல் உண்மைதான் ...
உன்னோடு இருக்கும் ..
காலத்தில் உணர்ந்தேன் ...!!!

தட்டிய தீக்குச்சி
விரைவாக
அணைந்துவிடும்
அந்த மன வேதனைதான்
எனக்கும் ...!!!

கே இனியவன் - கஸல் 78

^^^

நீ என்னில்
வாழ்வதும்
நான் உன்னில்
வாழ்வதும் -தான்
காதல்....!
என் பிரிந்தாய் ...?

குத்துவிளக்கு..
ஏற்றினாலும்...
மின்விளக்கு...
ஏற்றினாலும்...
வெளிச்சம் ....
ஒன்றுதான் ...
வசதிக்காய் ...
காதல் செய்யாதே ...!!!


நீ
பேசினாலும்
பேசாவிட்டாலும்
வலிப்பது என்
இதயம் தான் 

கே இனியவன் - கஸல் 79


^^^

ரத்தமாய் .
சிவந்திருக்கிறது
என் வீட்டு ரோஜா
நீ தந்ததாலோ ...?

என் இறந்த
இதயத்தின் -மேல்
காதல் கவிதை .....
எழுத சொல்கிறாயே ....!!!

நீ ....
எனக்குபன்னீர் ....
தெளிக்கவேண்டும் ...
கண்ணீர் தருகிறாய் ....!!!
+
கே இனியவன் - கஸல் 80

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்