கே இனியவன் - கஸல் 26 - 30

பூ இதழ் மீது விழும் 
கதிரவன் ஒளி போல் 
நம் காதல் -காலையில் 
ஒருவிதம் -மாலையில் 
ஒருவிதம் 


நான் 
நன்னீர் குடிப்பதா ..?
வெந்நீர் குடிப்பதா ..?
என்பது -உன் கையில் 


பரீட்சை மண்டபத்தில் 
நான் வினா 
நீ விடை 
திருத்துபவர் -காதல் 

கே இனியவன் -  கஸல் 26

^^^

நான் பல் புடுங்கிய 
வெறும் பாம்பு 
மகுடியும் நீ 
வாசிப்பதும் நீ 
பாம்புக்கூடையும் நீ 

சந்தன கட்டையை 
தேய்த்தால் வரும் 
வாசனை நம் காதல் 


உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ 
வானவில் 

கே இனியவன் -  கஸல் 26


^^^

என் இறந்த காலம் தான் ..
நான் உயிரோடு இருந்தேன் ..
அப்போது நீ என்னை.. 
காதலிக்கவில்லை ..

காதல் செடி என்று 
நினைத்தேன் -அது 
விருட்சம் என்று இப்போது 
புரிந்து கொண்டேன் 


நீ என் ஆழமான 
அதிசயமான கடல் 
உன் துறைமுகத்தை நான் 
அடையும் வரை

கே இனியவன் -  கஸல் 28


^^^

உன் பார்வை என்னை ..
குருடாக்கி விட்டது..
அதனால் தான் -நான் 
உன்னை தினமும் பார்க்க ..
ஆசைப்படுகிறேன் ..

உன் காதல் மீது 
ஏறி நின்று -என் 
காதலை தேடுகிறேன் 

துளசியைப்போல் 
நான் -உனக்கு 
முழுநேரமும் 
மூச்சு தருகிறேன் ..

கே இனியவன் -  கஸல் 29


^^^

நீ கண்ணீர் விடும் வரை ..
காத்திருக்கிறேன் ..
கண்ணீராக நான்.. 
வருவதால் ..
ஆனந்தம்..!!!

தயவு செய்து ..
மௌனமாக இரு .
குழப்பிவிடாதே..
என்னை ..


நான் உன்னை மூச்சாக ..
பார்க்கிறேன் நொடிப்பொழுதில் 
வந்துகொண்டிருப்பாய் 
நின்றுவிடாதே 



கே இனியவன் -  கஸல் 30

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்