கவிப்புயல் இனியவன் கஸல் 141-150
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
காதல்
சொல்லமுடியாத ....
இன்பம் ....
சொல்லி அழக்கூடிய...
துன்பம் ....!!!
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...!!!
நிலா கூட .....
பிரிவை ஏற்கவில்லை
அமாவாசையாக ....
மாறிவிட்டது .....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 141
---
சொல்லமுடியாத ....
இன்பம் ....
சொல்லி அழக்கூடிய...
துன்பம் ....!!!
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...!!!
நிலா கூட .....
பிரிவை ஏற்கவில்லை
அமாவாசையாக ....
மாறிவிட்டது .....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 141
---
கப்பல் கனமாக ....
இருந்தாலும் .....
தண்ணீரில் ....
தள்ளாடும் .....
காதல் கனமாக ....
இருந்தாலும் ....
கண்ணீரில் ....
தள்ளாடும் .....!!!
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
கண்ணீர் தான் ...
பாசனம் .....!!!
பூவின் மீது ....
வண்டுக்கு மோகம் ....
பூவுக்கும் இருந்தால் ....
இன்பம் ....
வாடிய பூவில் .....
என்னபயன் .....?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 142
இருந்தாலும் .....
தண்ணீரில் ....
தள்ளாடும் .....
காதல் கனமாக ....
இருந்தாலும் ....
கண்ணீரில் ....
தள்ளாடும் .....!!!
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
கண்ணீர் தான் ...
பாசனம் .....!!!
பூவின் மீது ....
வண்டுக்கு மோகம் ....
பூவுக்கும் இருந்தால் ....
இன்பம் ....
வாடிய பூவில் .....
என்னபயன் .....?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 142
---
என் உள்ளத்தில் காதல்
வேண்டாம் போதும்
அவஸ்தை
தயவு செய்து இன்னும்
கொஞ்சம் காயப்படுத்து
உன்னை நினைத்தபடி வாழ
என் ஒவ்வொரு இமை
சிமிட்டலும் உன்னை
நான் இழப்பதாகவே
வருந்துகிறேன் தயவு செய்து
கண்சிமிட்டும் நேரம் வராதே
காதல் என்பது
உடல் முழுவதும்
உள்ளமாக மாறும்
இயற்கை நிகழ்வு
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 143
வேண்டாம் போதும்
அவஸ்தை
தயவு செய்து இன்னும்
கொஞ்சம் காயப்படுத்து
உன்னை நினைத்தபடி வாழ
என் ஒவ்வொரு இமை
சிமிட்டலும் உன்னை
நான் இழப்பதாகவே
வருந்துகிறேன் தயவு செய்து
கண்சிமிட்டும் நேரம் வராதே
காதல் என்பது
உடல் முழுவதும்
உள்ளமாக மாறும்
இயற்கை நிகழ்வு
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 143
----
நீ
ஆடையை மாற்றுவது
போல் நான் -கவிதையை
மாற்றமுடியாது
வாசனைக்காக
தான் -சந்தானம்
காற்றில் கலக்கிறது
நீ என்னோடு கலந்ததுபோல்
தரையில்
கண்டெடுத்த -காசுபோல்
உன் காதல் கடிதம்
பலகோடி பணம்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 144
ஆடையை மாற்றுவது
போல் நான் -கவிதையை
மாற்றமுடியாது
வாசனைக்காக
தான் -சந்தானம்
காற்றில் கலக்கிறது
நீ என்னோடு கலந்ததுபோல்
தரையில்
கண்டெடுத்த -காசுபோல்
உன் காதல் கடிதம்
பலகோடி பணம்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 144
----
நான்
காதலில் எரிகிறேன்
நீயோ
மழையில் நனைகிறாய்
அழுவதை
தடுக்க காதலின்
ஒரு விதியும் இல்லை
என் ஒவ்வொரு கனவும்
நான் உனக்கு எழுத்து
காதல் காவியம்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 145
காதலில் எரிகிறேன்
நீயோ
மழையில் நனைகிறாய்
அழுவதை
தடுக்க காதலின்
ஒரு விதியும் இல்லை
என் ஒவ்வொரு கனவும்
நான் உனக்கு எழுத்து
காதல் காவியம்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 145
---
உன் கண்ணால்
காதல் கோலம்
போடுகிறாய் -நான்
அதற்கு வர்ணம்
திட்டுகிறேன்
காதலில்
பூக்கள் சிரித்ததை
விட வாடியதுதான்
அதிகம்
உனக்கு நான்
காதலன் உறவு
நீ எனக்கு என்ன
உறவு ....?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 146
காதல் கோலம்
போடுகிறாய் -நான்
அதற்கு வர்ணம்
திட்டுகிறேன்
காதலில்
பூக்கள் சிரித்ததை
விட வாடியதுதான்
அதிகம்
உனக்கு நான்
காதலன் உறவு
நீ எனக்கு என்ன
உறவு ....?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 146
----
நீ
சிந்திவிடக்கூடாத
கண்ணீர் -நான்
சிந்திக்கிறேன்
கண்ணீர் வருகிறது
என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது
என் தூக்கத்தை
கனவு கலைக்கிறது
என் நினைவை
நீ கலைக்கிறாய்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 147
சிந்திவிடக்கூடாத
கண்ணீர் -நான்
சிந்திக்கிறேன்
கண்ணீர் வருகிறது
என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது
என் தூக்கத்தை
கனவு கலைக்கிறது
என் நினைவை
நீ கலைக்கிறாய்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 147
----
நீ வானவில்
நான் இரவு
எப்படி உன்னை
நான் பார்ப்பது ...?
கவிதை எழுதும் போது
கற்பனை வரவில்லை
என்றால் -உன்னை
நினைப்பேன்
நான் இறக்கவே
மாட்டேன்
என் இதயம் -உன்
இதயத்துக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 148
நான் இரவு
எப்படி உன்னை
நான் பார்ப்பது ...?
கவிதை எழுதும் போது
கற்பனை வரவில்லை
என்றால் -உன்னை
நினைப்பேன்
நான் இறக்கவே
மாட்டேன்
என் இதயம் -உன்
இதயத்துக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 148
---
நீ வைரக்கல்
கண்ணாடியையும்
வெட்டுவாய் -என்
கண்ணையும்
பறிக்கிறாய்
உன்னை சந்தித்தது
ராமனின் சுகம்
பிரிந்தது ராவணன்
சுகம்
நீ
என்னை விட்டு
விலகமுன்
என் மனம் உன்னை
விட்டு விலகிவிடும்
பலதூரம்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 149
கண்ணாடியையும்
வெட்டுவாய் -என்
கண்ணையும்
பறிக்கிறாய்
உன்னை சந்தித்தது
ராமனின் சுகம்
பிரிந்தது ராவணன்
சுகம்
நீ
என்னை விட்டு
விலகமுன்
என் மனம் உன்னை
விட்டு விலகிவிடும்
பலதூரம்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 149
----
நீ என்னில்
காதலால்
மறைந்திருக்கிறாய்
முடிந்தால் -நீயே
உன்னை கண்டுபிடி
என் பிறந்ததிகதி
ஏப்பிரல் முதல் தேதி
உன்னை நான் கண்ட தேதி
நீ வரும் போது
காதல் வரவும்
நீ போகும் போது
காதல் போவதும்
காதல் ஒன்றும் சூரிய
உதய செயற்பாடல்ல ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 150
காதலால்
மறைந்திருக்கிறாய்
முடிந்தால் -நீயே
உன்னை கண்டுபிடி
என் பிறந்ததிகதி
ஏப்பிரல் முதல் தேதி
உன்னை நான் கண்ட தேதி
நீ வரும் போது
காதல் வரவும்
நீ போகும் போது
காதல் போவதும்
காதல் ஒன்றும் சூரிய
உதய செயற்பாடல்ல ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 150
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக