கே இனியவன் - கஸல் 46 - 50

காதலில் தோற்றவன் ..
கண்ணீர் விடுகிறான்
காதலை விரும்புபவன்
கண்ணை தேடுகிறான்
நான் இரண்டுக்கும் நடுவில்
தத்தளிக்கிறேன் ....

நான் எரிகிறேன் நீயோ
சூரிய குளியல்
குளிக்கிறாய்

நான் என் இஸ்ரத்தை
சொன்னேன் -அவள்
தன கஸ்ரத்தை சொன்னாள் ...!!!



கே இனியவன் -  கஸல் 46

^^^

நான் இரவில் 
தனியாக பேசுவேன் 
விடியல் காலை 
அதுதான் பத்திரிகையில் 
கவிதை 

நீ 
பனிக்கட்டி 
உனக்கில்லை 
குளிர் 

நீ சூடில்லாத 
நெருப்பு 
நான் நெருப்பில்லாத 
சூடு 

கே இனியவன் -  கஸல் 47


^^^

காதலில் நாம் 
ஓட்டைப்பானை 
நீ என்னை நிரப்பு 
நான் உன்னை 
நிரப்புகிறேன்

நான் உன் காலில் மெட்டி 
போடவிருமபுகிறேன்
நீ விலங்கு போட 
விரும்புகிறாய் 

நீ தயவு செய்து 
காதலிக்காதே 
பார்த்ததிலேயே 
இத்தனை தொல்லை
என்றால் காதலித்தால் ..???

கே இனியவன் -  கஸல் 48


^^^

இரவில் விளக்கை ..
விரைவில் அணைத்துவிடுவேன் 
எங்கே நீ கனவில் 
வராமல் விட்டுவிடுவாயோ 
என்ற பயம் தான் 

வா 
பௌணமி நிலவில் ..
ஒழித்து பிடித்து 
விளையாடுவோம் 
அமாவாசை அன்று 
நேருக்கு நேர் 
பேசுவோம் 

உனது முன்னாள் 
காதலன் 
இந்நாள் கணவன் 

கே இனியவன் -  கஸல் 49


^^^

நீ மீன் தொட்டி 
நான் அதிலுள்ள மீன் 
வெளியே போக முடியாது 
என்பதால் உன்னையே 
சுற்றி சுற்றி வருகிறேன் 

உனக்காக -ஒரு 
ஜீவன் அழுகிறது என்றால் ..
என்னைவிட நீ யாரை சொல்வாய் 

நீ போதையுடன் ..
விஷம் உண்டால் நிச்சயம் 
இறப்பு தான் ...
தெரிந்தும் குடிக்கிறேன் 

கே இனியவன் -  கஸல் 50



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்