கே இனியவன் - கஸல் 121 - 130

ரத்தமாய் .
சிவந்திருக்கிறது 
என் வீட்டு ரோஜா 
என் இதயத்தை போல் ...!!!

என் இறந்த 
இதயத்தின் -மேல் 
காதல் கடிதம் எழுதுகிறாய் ...!!!

நீ எனக்கு 
தண்ணீர் தான் 
தரவேண்டும் 
கண்ணீர் தருகிறாய் 

+
கே இனியவன் - கஸல் 121

----

உன் இதயம் 
உலகில் மர்மதேசம் ...!!!

நடந்துவந்தேன் 
வீதியால் -உன் 
சிரிப்பில் தடக்கி 
விழுந்துவிட்டேன் 
காதல் கிணற்றில் 
மூச்சு திணறுகிறேன் ...!!!

நம் 
காதல் -என்ன 
மின் வெட்டா ...?
அடிக்கடி நின்று 
நின்று வருவதற்கு ...!!!

+
கே இனியவன் - கஸல் 122

----

காதல் போதையில் 
அதிகம் வெறியாகி 
விட்டேன் 
கற்பின் புனிதம் 
மாறவில்லை....!!! 

என் மனதுக்குள் 
இசைக்கும் -இசை 
நீ ....!!!

காதலில் பிரிந்தது நீ 
அழுவது நான் 
அலட்டுவது நான் 
என்னை மறந்து
சிரிப்பதுன் நான்...!!! 

+
கே இனியவன் - கஸல் 123

----

அமாவாசையில் 
காத்திருக்கிறேன்
முழுநிலவாக நீ 
வருகிறாய் ....!!!

போக்குவரத்து 
விதிபோல் 
காதல் விதிகள் 
இருந்தால் 
காதல் விபத்து 
வராதே ....?

என் பாதத்தை 
என் வீட்டுக்குத்தான் 
அடிவைக்கிறேன்
அது உன் வீட்டை 
நோக்கித்தான் 
வருகிறது ...!!!

+
கே இனியவன் - கஸல் 124

*****

நீ என்னில் 
வாழ்வதும் 
நான் உன்னில் 
வாழ்வதும் -தான் 
காதல் 
சார்ந்து- அல்ல....!!!

குத்துவிளக்கு 
ஏற்றினாலும் 
மின்விளக்கு 
ஏற்றினாலும் 
வருவது -வெளிச்சம் 
நம் காதல் போல ....!!!

நீ 
பேசினாலும் 
பேசாவிட்டாலும் 
வலிப்பது என் 
இதயம் தான் 

+
கே இனியவன் - கஸல் 125

----

காதலில் ...
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...

நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...

நான் 
கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
என்னை கொன்று ....
எழுதுகிறாய் ...!!!

கஸல் 126

---

சொல்லமுடியாது ..
அது படும் துன்பம் ..
தூக்கத்தை கூட ..
வெறுக்கிறது ...!!!

உனக்கு தெரியாது ..
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...

நிலாவிடம் ..
கேட்டுப்பார் ...
நாம் சேர்ந்திருந்த ...
நாட்களை கூறும் ...

கஸல்..127

----

எல்லா கப்பல்களும் ...
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..

நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான் 
உரம் போடும் ...

பூவின் மீது ...
வண்டு இருக்கலாம் 
வெடி குண்டு 
இருக்கமுடியுமா ...??

கஸல் 128

----

பூக்கள் வெறுக்கும் ..
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..

நான் கனவில் காண ..
உன் நினைவுகள் 
என்னிடம் இல்லை ..!!!

நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!

கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 129

----

நம்முள் சமரசம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்